பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 345 காசிப முனிவருக்கும், அதிதிக்கும் மகனாக அவதரித்தார் விஷ்ணு. குள்ளமான உருவத்தை உடையவராக இருந்தார். பலிச் சக்கரவர்த்தி மிகப் பெரிய யாகம் ஒன்றினுக்கு ஏற்பாடு செய்தான். அந்த யாகத்தின் பொழுது, யார் வரம் கேட்டாலும் வழங்கப்படும் என்று அறிவித்தான். யாகத்தில் கலந்து கொண்ட குள்ளன், வேதங்களை மிக அழகாக எடுத்துக் கூறினான். இதனால் மனம் மகிழ்ந்த பலிச் சக்கரவர்த்தி, அச் சிறுவனுக்கு ஏதேனும் வரம் அளிக்க விரும்பினான். பலிச் சக்கரவர்த்தியின் குருவாகிய சுக்ராச்சாரியார் இதில் சந்தேகம் கொண்டு, பலிச் சக்கரவர்த்தியைத் தடுத்தார். தான் வாக்குக் கொடுத்தபடியே நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதனின்று பின்வாங்க மாட்டேன் என்றும் கூறிய அரசன், குள்ளனை நோக்கி, “சிறுவனே! உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்” என்று கூறினான். வரத்தினைக் கொடுப்பதற்கு முன் புனித நீரைக் கொண்டு சிறிய சடங்கு செய்யப்பட வேண்டி இருந்தது. வரம் கொடுப்பதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று நினைத்த சுக்ராச்சாரியார், நீர் வைத்திருந்த பாத்திரத்தின் உள்ளே சென்று, யாரும் அதிலிருக்கும் நீரை எடுக்க முடியாதபடி, அந்தப் பாத்திரத்தை இறுக்க மூடிக் கொண்டார். அப் பாத்திரத்தில் உள்ள நீரை எடுக்க அதனை ஒரு குச்சியால் துளைத்தான், குள்ளன். அக்குச்சியானது. பாத்திரத்தின் உள்ளே அமர்ந்திருந்த சுக்ராச்சாரியாரின் கண்ணைக் குத்தியதால் அவருக்கு அன்று முதல் ஒரு கண்ணே இருந்தது. பலிச் சக்கரவர்த்தியைப் பார்த்த குள்ளன், “அரசே! என்னுடைய குருவிற்கு தட்சணை கொடுப்பதற்காக என்னுடைய மூன்று அடியில் அடங்கியிருக்கும் மண்ணைத் தரவேண்டும்” என்று கேட்க அரசனும் ஒப்புக் கொண்டான். குள்ளன் உடனே மிகப் பெரிய உருவெடுத்து ஒர் அடியினைக்