பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 பதினெண் புராணங்கள் கீழே வைக்க, அது பூலோகம் முழுவதையும் அடைத்துக் கொண்டது. பலியிடம் இருந்து பெற்றுக் கொண்ட இம் மூன்று உலகங்களையும் இந்திரனுக்கு வழங்கினார். குள்ளனாக அவதாரம் எடுத்திருந்த விஷ்ணு, வேறு எங்கும் செல்ல முடியாத பலி அரசன் பாதாள லோகம் செல்ல முற்படுகையில் அவனைத் தடுத்து, அவன் பெருந்தன்மையைப் பாராட்டி, “பிற்காலத்தில் இந்திரன் என்ற பதவியை வகிப்பாய்!” என்று பலி அரசனுக்கு வரம் கொடுத்தார். 6. பரசுராம அவதாரம் வர்ணங்களில் இரண்டாவது இடத்தைப் பெறும் சத்ரியர்கள் ஆயுதம் ஏந்தி உலகைக் காக்க வேண்டியவர்கள். பிராமணர்கள் வேத, சாஸ்திரங்களைப் படிப்பது, யக்ஞம் முதலியவற்றைச் செய்வது போன்ற கடமைகளை ஆற்ற வேண்டும். ஒரு சமயம் சத்ரியர்கள் மிகவும் ஆணவமுற்று, பல கொடுமைகளைச் செய்தனர். அச்சமயத்தில் விஷ்ணு, ஜமதக்கினி முனிவருக்கும் ரேணுகாவிற்கும் மகனாக அவதரித்தார். பிருகு முனிவரின் பரம்பரையில் வந்ததால், பரசுராமனுக்கு பார்கவா என்ற பெயரும் வழங்கப்பட்டது. பிராமணர்களைக் காப்பாற்றுவதும், சத்ரியர்களின் ஆணவத்தை அடக்குவதும் பரசுராமனின் வேலையாக இருந்தது. தத்தாத்ரேய முனிவரிடம் எல்லா வரங்களும் பெற்ற கார்த்தவீரியன், ஆயிரம் கைகளை உடையவனாகவும், மூவுலகை ஆள்பவனாகவும் இருந்தான். ஒரு நாள் கார்த்த வீரியன் வேட்டைக்குச் சென்று திரும்பும் வழியில் களைப்பின் காரணமாக ஜமதக்கினி முன்ரிவரின் ஆசிரமத்தில் அழைக்கப் பட்டான். ஜமதக்கினி முனிவரிடம் காமதேனு என்ற பசு இருந்தது. முனிவர் கேட்ட அனைத்தையும் அப்பசு வழங்கியது.