பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 347 ஆதலால் களைப்பாக இருந்த கார்த்த வீரியனுக்கும், அவனுடைய சேனைகளுக்கும் அறுசுவை விருந்து படைத்தார் முனிவர். காமதேனுவைக் கண்டு மிகவும் விருப்பம் கொண்ட கார்த்தவீரியன், அதனைக் கொடுக்குமாறு முனிவரிடம் கேட்க, அவர் மறுத்து விட்டார். கோபம் கொண்ட கார்த்தவீரியன் அப்பசுவைத் திருடிச் சென்றான். இதனால் கார்த்தவீரிய னுக்கும் பரசுராமனுக்கும் போர் நடந்தது. கார்த்தவீரியன் தலையினை வெட்டி, காமதேனுப் பசுவை மீட்டான் பரசுராமன். சில காலத்திற்குப் பின்பு, கார்த்தவீரியனின் புதல்வர்கள், பரசுராமன் இல்லாத பொழுது ஜமதக்கினி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து அவரைக் கொன்றனர். இதனால் கடுங் கோபம் கொண்ட பரசுராமன் இருபத்தியோரு தலைமுறை சத்ரியர்கள் அனைவரையும் கொன்று குவித்தான். இறுதியில் காசிப முனிவரிடம் உலகை ஒப்படைத்து விட்டு, மகேந்திர மலைக்குச் சென்று வாழ்ந்தான். 7. இராமாவதாரம் விஷ்ணுவின் கொப்பூழில் இருந்து தோன்றியவர் பிரம்மன். இவருடைய புதல்வன் மாரீச்சி. இவரது பரம்பரையில் தோன்றிய அஜா என்பவனின் மகனே தசரதன் ஆவான். தசரதனுக்கு இராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர். இஷ்வாகுவின் மகனாகிய ககுத்தன் பரம்பரையில் தோன்றியதாலும், ரகுவின் பரம்பரையில் தோன்றியதாலும் இராமனுக்குக் காகுத்தன் என்றும், ராகவன் என்றும் பெயர்கள் இருந்தன. விஷ்ணு, இராவணன் என்னும் அரக்கனையும், மற் எல்லா அரக்கர்களையும் அழிக்க நினைத்தார். ஆகையா