பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 349 இராமனைக் காட்டுக்கு அனுப்ப தசரதன் மறுத்து விட்டான். இதனை அறிந்த இராமன் தானே முன்வந்து காட்டுக்குப் போவதாகச் சொல்லி விட்டு, இலக்குவனுடனும் சீதையுடனும் காட்டுக்குப் புறப்பட்டான். அந்த நேரத்தில் பரதனும் சத்ருக்கனனும் மாமன் வீட்டிற்குச் சென்று இருந்தார்கள். இராமன் பிரிவைத் தாங்காத தசரதன் இறந்து விட்டான். பரதனுக்கு இச்செய்தியைச் சொல்லி அனுப்பி அயோத்திக்கு வரவழைத்தார்கள். நடந்ததை அறிந்த பரதன் பட்டத்தை ஏற்க மறுத்து, காட்டிற்குச் சென்று இராமனை மீண்டும் வருமாறு அழைத்தான். இராமன் மறுத்து விடவே, அவனுடைய பாதுகைகளைக் கொண்டு வந்து அயோத்திக்கு வெளியே நந்திக் கிராமத்தில் தங்கி, சிம்மாசனத்தில் பாதுகைகளை வைத்துவிட்டு இராமனின் பிரதிநிதியாக இருந்து அரசாட்சி செய்தான். காடு சென்ற இராமன், குகன் என்ற அரசனுடைய எல்லைக்குள் சென்று அவனோடு நட்புக் கொண்டு, ஜானவி நதியைக் கடந்து, பிரயாகை வந்து, பரத்துவாசர் ஆசிரமத்தில் தங்கி, பிறகு சித்திரக்கூட மலைக்குச் சென்று, அங்குள்ள பஞ்சவடி என்ற அழகிய இடத்தில் பர்ணசாலை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தான். அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த சூர்ப்பணகை என்ற அரக்கி இவர்களைக் கண்டு, இராமன் மேல் ஆசை கொண்டு பேச இலக்குவன் அவள் மூக்கையும் காதுகளையும் வெட்டி விட்டான். மூக்கை இழந்த சூர்ப்பனகை தன் தமையன் கரன் என்பவனிடம் முறையிட்டாள். பதினாயிரம் படையுடன் வந்த கரன் இராமனிடம் படைகளை இழந்து தானும் கொல்லப்பட்டான். இதை அறிந்த சூர்ப்பணகை மற்றொரு தமையனாகிய இராவணனிடம் சென்று முறையிட்டாள். இராவணன் மாரீசனைப் பொன் மான் வடிவுடன் பர்ணசாலை எதிரே உலவுமாறு கட்டளை