பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 353 கடுங்கோபம் கொண்டு அனிருத்தாவுடன் போர் தொடுத்தான். கிருஷ்ணன், பலராமன், பிரத்யும்னன் ஆகியோர் அனிருத்தன் பக்கமும், சிவபெருமான், நந்திதேவர், கார்த்திகேயன் ஆகியோர் வாணாவின் பக்கமும் இருந்து போர் புரிந்தனர். முடிவில் கிருஷ்ணன் வாணாவின் ஆயிரம் கைகளை வெட்டி எறியும் பொழுது, சிவபெருமான் இடையிட்டு இரண்டு கைகளை விட்டு விடும்படி கூறவே, கிருஷ்ணனும் அதனை ஒப்புக் கொண்டார். மேலே கூறப்பட்ட கதைகள் அனைத்தும் அக்னி புராணத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. ஆயினும், எட்டாவது அவதாரமாகிய கிருஷ்ணன் பற்றிய கதைகள் மகாபாரதத்திலும் கூறப்பட்டு இருப்பதால், அக்னி புராணம் இனி பாரதக் கதையினைக் கூறுகிறது. மகாபாரதம் யயாதி மன்னன் பரம்பரையில் வந்தவனாகிய குரு வம்சத்தைச் சேர்ந்தவன் சந்தனு அரசன். சந்தனுவும் கங்கையும் மணம் புரிந்து, அவர்களுக்கு பீஷ்மர் மகனாகப் பிறந்தார். சந்தனு அரசன், சத்யவதி என்பவளையும் மணந்து சித்ரங்கதா, விசித்ரவீரியன் என்ற இரு மகன்களைப் பெற்றான். சித்ரங்கதா இளமையிலேயே இறந்து போனதால், காசி அரசனை வென்று அவனுடைய மகள்களாகிய அம்பிகா, அம்பாலிகா இருவரையும் தன் சகோதரன் விசித்ரவீரியனுக்கு மணம் செய்து வைத்தார் பீஷ்மர். விசித்ரவீரியனுக்குப் பிள்ளைகள் இல்லாமலே இறந்து போனவுடன், வியாசதேவர் அஸ்தினா புரத்திற்கு அழைக்கப்பட்டார். வியாசதேவருக்கும் அம்பிகா விற்கும் பிறந்த பிள்ளை திருதராஷ்டிரன் என்றும், வியாச தேவருக்கும் அம்பாலிகாவிற்கும் பிறந்த பிள்ளை பாண்டு என்றும் அழைக்கப்பட்டனர். திருதராஷ்டிரன் காந்தாரியை 23سم الملا