பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 பதினெண் புராணங்கள் தோற்கடிக்கப்பட்ட பீஷ்மர், பல நாட்கள் அம்புப் படுக்கையில் படுத்திருந்தார். விராட மன்னன், துருபதன் முதலிய மன்னர்கள் பலர் துரோணரால் கொல்லப்பட்டனர். போர் தொடங்கிய பதினைந்தாவது நாள், துரோணர் மகன் அசுவத்தாமன் கொல்லப்பட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது. மகன் இறந்த செய்தி கேட்ட துரோணர் தன் ஆயுதங்களை எல்லாம் கீழே போட்டுவிட்டு, மனம் கலங்கி நின்ற சமயத்தில், திருஷ்டத் தூய்மனால் கொல்லப்பட்டார். கர்ணன், அருச்சுனனால் கொல்லப்பட்டான். இறுதியில் பீமனுக்கும் துரியோதனனுக்கும், கதாயுதப் போர் நடந்தது. துரியோதனனின் தொடையினைக் கிழித்து, அவனைக் கொன்றான் பீமன். துரோணர் கொல்லப்பட்ட செய்தி அறிந்த அசுவத்தாமன் கடுங்கோபம் கொண்டான். நடுநிசியில், பாண்டவர்களின் பாசறையில் புகுந்த அசுவத் தாமன், திருஷ்டத்துாய்மனையும், திரெளபதியின் ஐந்து புதல்வர்களையும் கொன்றான். அசுவத்தாமனைப் பழிவாங்க வேண்டும் என்று கூறிய திரெளபதி அருச்சுனனை அசுவத்தாம னுடன் போர் புரியும்படிக் கூற இருவரும் தெய்வீக அஸ்திரங் களை ஏவினர். அவை பூமியை அழித்து விடும் என்பதனால் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கூறப்பட்டது. அர்ச்சுனன் தன் அஸ்திரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். ஆனால் அசுவத்தாமனால் திரும்பப் பெற முடியவில்லை. அது நேராக, அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கருவில் இருந்த குழந்தையைக் கொன்றது. இறந்த குழந்தைக்கு உயிர் கொடுத்துக் காத்தான் கிருஷ்ணன். அக் குழந்தையே பரிட்சித்து என்ற பெயர் பெற்றது. யுத்தம் முடிந்தவுடன், யுதிஷ்டிரனுக்கு அரசனுடைய கடமைகள் அனைத்தையும் கற்பித்தார் பீஷ்மர். அதன் பிறகே அவர் இறந்து போனார். அரச பதவி பெற்ற யுதிஷ்டிரன்