பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 பதினெண் புராணங்கள் கல்பத்திலும், ஒவ்வொரு மன்வந்திரத்திலும் விஷ்ணு வெவ்வேறு வடிவங்களில் அவதரிப்டார். விஷ்ணுவின் பத்து அவதாரங்களைப் பற்றிக் கேட்டும், படித்தும் பயன் பெறுபவர்கள் சுவர்க்கத்தினை அடைவர். பிரபஞ்சம் அக்னி, பிரபஞ்சம் தோன்றிய வரலாற்றை வசிட்டருக்குக் ஆகிய மூன்று தொழில்களையும் செய்தார். பிரபஞ்ச உற்பத்திக்கு முன்னர், எங்கும் பரப் பிரம்மமே நிறைந்திருந்தது. தொடக்கத்தில் பிரம்மாண்டத்தின் விதைகளை விஷ்ணு தூவ, அது மிகப் பெரிய பொன் முட்டை வடிவுடன் தோன்றிற்று. பிரம்மன் தன்னைத் தானே தோற்றுவித்துக் கொண்டு, அதனுள்ளேயே ஓராண்டு இருந்தார். பிறகு அந்த முட்டையை இரண்டாகப் பிளந்தார். மேல்பகுதி சொர்க்கமாகவும், கீழ்ப்பகுதி பூலோகமாகவும் ஆக்கப்பட்டது. இதன்பிறகு சொல்லப்பட்ட அக்னி புராணம் சொல்லும், பிரபஞ்ச உற்பத்திக் கதை ஏற்கெனவே பல புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ளது பிரார்த்தனை செய்வது, கோயில் கட்டுவது, சிலை வடிப்பது எவ்வாறு ? (அக்னி புராணம் பிரார்த்தனை செய்வது எப்படி, கோயில் கட்டுவது எப்படி, தெய்வ வடிவங்கள் செய்வது எப்படி என்பன பற்றியெல்லாம் விரிவாகப் பல அத்தியாயங் களில் கூறிச் செல்கிறது. அவை, பிரார்த்தனை பற்றிக் கூறும் பொழுது, மிக துணுக்கமான பல விஷயங்களைக் துள்ளோம்)