பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 பதினெண் புராணங்கள் இருக்கும் உத்தராயண, தட்சணாயன காலங்கள் என்பவற்றை அடுத்துக் குறிப்பிட்ட சமயத்திற்குரிய விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. கார்த்திகை, சித்திரை அஸ்வினி மாதங்களிலும் வரும் சுக்கிலபட்சம் முதல் நாள் பிரதமை, பிரம்மனுக்குரிய நாளாகும். அன்று பிரம்மனை வழிபடுவது நன்று. இரண்டாவது நாளன்று துவிதியை) பூக்களைத் தின்று, இரண்டு அஸ்வினிகளையும் வணங்க வேண்டும். இவ் விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அழகிய உடலையும் அதிர்ஷ்டத்தையும் பெறுவர். கார்த்திகை மாதம், சுக்கிலபட்சம் துவிதியை திதியில் யமனை வழிபட வேண்டும். இந்த நாளில் விரதம் இருப்போர் நரகலோகம் செல்லமாட்டார். இந்நாளில் பலராமனையும் கிருஷ்ணனையும் துதிக்கலாம். - சித்திரை மாதம் சுக்கிலபட்சம் திருதியை திதியில் விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். சிவன் பார்வதியை மணந்த நாள் இதுவாகலின் இவ்விரதத்திற்கு கெளரி விரதம் என்று பெயர். பழங்களை வைத்துச் சிவன், பார்வதியை வழிபட வேண்டும். பார்வதி தேவியைக் கீழ்க்கண்ட நாமங்கள் கூறிப் பிரார்த்திக்க வேண்டும். அவை, லலிதா, விஜயா, பத்ரா, பவானி, குமுதா, சிவா, வசுதேவி மற்றும் கெளரி. சுக்கிலபட்சம் நான்காம் நாள் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படும். கண தேவதைகளை வழிபடுவதற்கும் சிறந்த நாள். வாசனையுள்ள மலர்களை வைத்து வழிபட வேண்டும். சுக்கிலபட்சம் ஐந்தாம் நாள் இருப்பது பஞ்சமி விரதம். இவ்விரதத்தினால் நோயற்ற வாழ்வும், கெட்ட சகுனங்களைப் பார்த்ததில் இருந்து விடுதலையும் கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் வரும் பஞ்சமி திதி சிறப்பானதாகும்.