பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 359 பத்தாம் நாள், சுக்கிலபட்சம் தசமி திதியில் விரதம் இருந்தால் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகத் திகழ முடியும். பதினோராம் நாள் ஏகாதசி திதி. விஷ்ணுவிற்கு மிகவும் உகந்த நாளாகும். ஏகாதசி விரதம் இருப்போருக்குக் குழந்தைப் பேறும், பொருட்களும் கிடைக்கும். பன்னிரண்டாம் நாள், சுக்கிலபட்சம் துவாதசி திதி எனப்படும். ஆவணி மாதத்தில் வரும் துவாதசி மாடு, கன்றுகளை வழிபடுவதற்கும், சித்திரையில் வரும் துவாதசி மன்மதனை வணங்கவும் சிறந்த நாளாகும். வருடம் முழுதும் துவாதசி விரதம் இருந்தால் ஒருவர் நரகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. அதிலும், ஆவணி மாதம், சுக்கிலபட்சம் துவாதசி அன்று திருவோண நட்சத்திரத்தில் விரதம் இருந்தால், புண்ணிய நதிகளில் நீராடினால் கிடைக்கும் புண்ணியத்தை விட அதிகமாகக் கிடைக்கும். புதன் கோளும் அச்சமயத்தில் இருந்தால், கிடைக்கும் புண்ணியம் இரட்டிப்பாகும். பதின்மூன்றாம் நாள், சுக்கிலபட்சம் அனுஷ்டிக்கப்படுவது திரயோதசி விரதம். மன்மதன், இவ்விரதம் இருந்து சிவபெருமானை வேண்டியதாகக் கூறப்படுகிறது. இத்திதியில் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் மிக்க சிறப்புகளைப் பெற்று வாழ முடியும். இந்திரனும், இத்திதியில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. கார்த்திகை மாதத்தில், சுக்கிலபட்சம் பதினான்காம் நாள் கடைப்பிடிப்பது சதுர்த்தசி விரதம். இச்சமயத்தில் விரதம் இருந்து, தான, தருமங்கள் செய்து சுவர்க்கத்தை அடைய முடியும். மகா, பால்குண மாதங்களில், கிருஷ்ணபட்சம் பதினான்காம் நாள் வரும் சதுர்த்தசி சிவராத்திரி எனப்படும். இவ்விரதம் இருப்போர், உண்ணாநோன்பு இருந்து, இரவு முழுவதும் விழித்துக் கொண்டே இருக்க வேண்டும். பயு-24