பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 371 மனைவி அறநெறி பிறழாதவளாக இருத்தல் வேண்டும். ஒர் அரசன் இறந்தால், அமைச்சர்களும் புரோகிதர்களும் காலத்தை விரயம் செய்யாமல் அடுத்த அரசனுக்கு முடிசூட்ட வேண்டும். ஒரு நாடு அரசனில்லாமல் இருப்பது நினைக்க முடியாத ஒன்றாகும். முடி சூட்டப்பட வேண்டிய மன்னன், அந்நிகழ்ச்சிக்கு முன்னர் மண் குளியல் செய்யவேண்டும். ஒவ்வொரு உறுப்புக்கும் குறிக்கப்பட்ட முறையில், குறிக்கப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை, குறிக்கப்பட்ட உறுப்பிற்குப் பூசுதல் வேண்டும். மலை உச்சியிலிருந்து எடுத்த மண்ணைக் காதுகளுக்கும், கிருஷ்ணன் கோயிலின் மண்ணை முகத்திற்கும், இந்திரன் கோயில் மண்ணை முதுகுக்கும், அரண்மனை மண்ணை நெஞ்சிற்கும், யானை தந்தத்தால் தோண்டிய மண்ணை வலக் கைக்கும், காளை மாட்டின் கொம்பு கிளறிய மண்ணை இடக் கரத்திற்கும், ஆற்றில் இருந்து எடுத்த மண்ணைப் பக்கங் களிலும், யாக குண்டத்தின் மண்ணைத் தொடைக்கும், மாட்டுக் கொட்டடியின் மண்ணைப் பாதத்திற்கும் பூசவேண்டும். மன்னன் இம்முறையில் மண் குளியல் செய்த பிறகு, பட்டாபிஷேகம் செய்து கொள்ளத் தகுதியுடையவனாகிறான். நான்கு வகைப்பட்ட அமைச்சர்கள் அபிஷேகம் செய்து வைப்பர். பிராமண அமைச்சர்கள் தங்கப் பாத்திரத்தில் காய்ச்சிய நெய்யினை ஏந்திக் கிழக்குத் திசையிலும், சத்திரிய அமைச்சர்கள் இனிப்புக் கலந்த தயிரை வெள்ளிப் பாத்திரத் தில் வைத்துக் கொண்டு தெற்குத் திசையிலும், மேற்குப் புறத்தில் வைசிய அமைச்சர்கள் தாமிரப் பாத்திரத்தில் தயிரை வைத்துக் கொண்டு நிற்பார்கள். வடக்குப் புறத்தில் சூத்திர அமைச்சர்கள் எல்லா ஜீவநதிகளில் இருந்தும் கொண்டு வந்த நீரை அரசர் முடியில் ஊற்றுவார்கள். இந்தச் சடங்குகள் முடிந்த பிறகே அவன் உண்மையாகவே அரசனாவான்.