பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 பதினெண் புராணங்கள் தீயினை வலம் வந்து, தன் குருவின் பாதத்தினைத் தொட்டு வணங்கித் தன்னுடைய படைகளுடன் யானை அல்லது குதிரை மீது அமர்ந்து வீதியில் வலம் வரவேண்டும். அரச பதவி ஏற்றுக் கொண்டபின், பல பதவிகளில் தக்கவர்களை நியமிக்க வேண்டும். ஒரு சத்ரியனோ பிராமணனோ படைத்தலைவனாக நியமிக்கப்பட வேண்டும். கடிதம் எடுத்துச் செல்பவன் வலுவான உடம்புடையவ னாகவும், ரத சாரதிகள் குதிரைகளின் இயல்பைத் தெரிந்த வனாகவும், கருவூல அதிகாரி வைரம் முதலிய கற்களின் தன்மையை நன்கு அறிந்திருக்க வேண்டும். மருத்துவன், யானைகளின் கண்காணிப்பாளன் ஒருவன், குதிரைகளின் கண்காணிப்பாளன் ஒருவன், அரண்மனை அதிகாரி ஒருவன், அரண்மனைப் பெண்களைக் கவனித்துக் கொள்ள ஒர் அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் அதற்குரிய தகுதியும், அதில் விருப்பமும் உள்ளவனையே நியமிக்க வேண்டும். இவ்வாறு நியமிக்கப்படும் அதிகாரிகள், அரசனுக்கு விசுவாசம் உடையவர்களாய் இருப்பதுடன் அவன் கட்டளை களை மீறாமல் செயல்படுபவர்களாக இருத்தல் வேண்டும். இந்த அதிகாரிகள் பொது இடங்களில் மகிழ்ச்சி தரும் விஷயங்களையே அரசனுக்குச் சொல்ல வேண்டும். விரும்பத் தகாத கசப்பான விஷயங்களைச் சொல்ல வேண்டுமானால், அரசனைத் தனியே சந்தித்துக் கூறவேண்டும். அரசப் பணியில் ஈடுபட்டவர்கள் திருடர்களாகவோ, அரசனை அவமதிப்பவர் களாகவோ இருக்கக் கூடாது. அரசனைப் போல் உடை அணியவும் கூடாது. அரசனிடம் அதிகமாக நெருங்கவும் கூடாது. தாங்கள் அறிந்த ரகசியங்களை வெளியிடக் கூடாது. ஒவ்வொரு பத்துக் கிராமங்களுக்கும் கவனிப்பாளனாக ஒர் அதிகாரியும், நூறு கிராமங்களுக்கு ஒரு மேலதிகாரியும்