பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்னி புராணம் 375 மாயை, உபேக்ஷா, இந்திரஜாலம் என்பன. இவற்றுள் முதல் நான்கும் மிக முக்கியமானவை. சாம என்றால் மென்மையான முறையில் தன் வழிக்குக் கொண்டு வருதல்; தான என்றால் ஒரு காரியத்தைச் சாதிப்பதற்காகத் தேவையான பொருளைக் கொடுத்தல்; பேத என்றால் அவர்களுக்குள் இருக்கும் பிளவுகளைப் பெரிதாக்கி ஒருவரைத் தன்வசம் இழுத்தல்; தண்டம் என்றால் தண்டனை கொடுத்தல்; மாயம் என்றால் வஞ்சகம் செய்தல்; உபேக்ஷா என்றால் வேண்டுமென்றே ஒருவரை உதாசீனப்படுத்தித் தன் காரியத்தை முடித்தல்; இந்திர ஜாலம் என்றால் செப்பிடு வித்தை மூலம் காரியம் சாதித்தல். அரசன் ஒருவர் செய்யும் தவற்றுக்கு ஏற்ப தண்டனை வழங்க வேண்டும். ஒருவன் தன்னுடைய பொருள் ஒன்றினைக் காணவில்லை என்று பொய் கூறினால், அரசவையினின்று விலக்கப்பட வேண்டும். பசு, யானை, குதிரை, ஒட்டகம் ஆகியவற்றைக் கொல்பவனின் கை அல்லது கால் வெட்டப்பட வேண்டும். தங்கம், வெள்ளி, பெண்ணைக் கடத்திச் செல்பவன் ஆகியோர் தூக்கிலிடப்பட வேண்டும். விஷம் கொடுப்பவன், தீ வைப்பவன் ஆகியோருக்கு மரணதண்டனை வழங்கப்படும். கணவனை மதிக்காத மனைவி, நாய்கள் ஏவப்பட்டுக் கொல்லப்படுவாள். கனவுகள் பின்வரும் கனவுகள் தீக்கனவுகள் என்று கூறப்படும். மனிதர்கள் மேல் மரம் முளைப்பது போலவும், புல் முளைப்பது போலவும் கனவு காணுதல்; கனவு காண்பவர் தான் மொட்டை அடித்துக் கொண்டிருப்பது போலவும், அழுக்கான உடை அணிந்திருப்பது போலவும் கனவு காணுதல்; திருமணம், பாடல் பாடுவது. பாம்பினை அடிப்பது, மிருகங் களைக் கொல்லுவதுபோல் கனவு காணல் ஆகியவையும் தீய