பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 பதினெண் புராணங்கள் கனவுகளாகும். எண்ணெய் குடிப்பது போலவும், பறவைகளின் மாமிசம் சாப்பிடுவது, வீடு இடிந்து விழுவதுபோல், குரங்கு களுடன் விளையாடுவது போல் கனவு காண்பது தீக் கனவாகும். தீய கனவு காண்பவர் விஷ்ணு, சிவன், கணேசன், சூரியன் ஆகியோரை வணங்க வேண்டும். முதல் ஜாமத்தில் காணும் கனவு, ஒரு வருடத்தில் பலிக்கும். இரண்டாம் ஜாமத்தில் காணும் கனவு ஆறுமாத காலத்திலும், மூன்றாம் ஜாமத்தில் காணும் கனவு மூன்று மாதத்திலும் பலிக்கும். நான்காம் ஜாமத்தில் காணும் கனவு பதினைந்து நாட்களிலும், விடியற்காலையில் காணும் கனவு பத்து நாட்களுக்குள்ளும் பலிக்கும். ஒருவர் முதலில் நல்ல கனவும், அடுத்துத் தீய கனவும் கண்டால், தீய கனவே பலிக்கும். ஆகையால் ஒருவர் நல்ல கனவு கண்டால் அதன் பிறகு தூங்குதல் கூடாது. உடனே எழுந்துவிட வேண்டும். பின் வருவனபற்றிக் காணும் கனவுகள் நல்ல கனவுகள் என்று கூறப்படும். மலைகள், குதிரை அல்லது எருதின் மேல் சவாரி செய்தல், வெண்ணிறப் பூக்கள், மரங்கள் ஆகியவை. ஒருவர் தனக்கு நிறைய கைகள், தலைகள் இருப்பது போலவும், புல், புதர், தன்னுடைய கொப்பூழிலிருந்து வளர்வது போலவும் கனவு காணுதல், வெண்ணிற மாலை அணிந் திருப்பது போல, சூரியகிரகணம், பகைவனின் கொடியைப் பற்றுதல் ஆகியவை நல்ல கனவுகளாகும். ஒருவர் பாயசம் உண்ணுவது போல் காணுதல், கனவு காண்பவர் தானே இறந்து விடுவது போல் கனவு காணுதல், வீடு தீப்பற்றி எரிவதுபோல் காணுதல் நல்ல கனவுகள் என்று கூறப்படும். ஈரமான துணிகள், பழங்கள் நிறைந்த மரங்கள், நீலமான மேகம் கனவில் வந்தால் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். தீய சகுனங்கள் என்பவை ஒருவன் வீட்டைவிட்டுப் புறப்படும் பொழுது, எதிர்ப்படவோ, காணவோ கூடாதவை.