பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 பதினெண் புராணங்கள் புரான தானம் இனி அக்னி புராணம் புராணங்களை தானமாகக் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பேசுகிறது. புராணங்களை தானமாகக் கொடுக்கும் பொழுது, பசுவையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு புராணத்திலும் உள்ள சுலோகங்கள் எத்தனை என்று அக்னி புராணம் கூறுகிறது. பிரம்ம புராணம்-25000; பத்ம புராணம்-12000; விஷ்ணு புராணம்-13000; வாயு புராணம்-14000; பாகவத புராணம்-18000: நாரத புராணம்-25000: மார்க்கண்டேய புராணம்-9000: அக்னி புராணம்-12000; பிரம்ம வைவர்த புராணம்-18000; லிங்க புராணம்-11000 வராக புராணம்14000; ஸ்கந்த புராணம்-84000; வாமன புராணம்-10000; கூர்ம புராணம்-8000 மச்ச புராணம்-13000; கருட புராணம்-8000, பிரம்மாண்ட புராணம்-12000; இங்கே கூறப்பட்டவற்றுள் பவிஷ்ய புராணம் மட்டும் கொடுக்கப்படவில்லை. பிரம்ம புராணம் தானமாகக் கொடுக்கப்பட வேண்டிய மாதம் வைகாசி. பத்ம புராணம்- ஜேஷ்டா விஷ்ணு புராணம்ஆஷாட வாயு புராணம்- சரவண பாகவத புராணம்பாத்ரா; நாரத புராணம்- அஸ்வினா; மார்க்கண்டேய புராணம்- கார்த்திகை, அக்னி புராணம்- மார்கசீரிஷா, பவிஷ்ய புராணம்- பெளச பிரம்மவைவர்த புராணம்- மகா: லிங்க புராணம்- பால்குண வராக புராணம்- சித்திரை. புராணங்களைப் படிப்பதாலும், கேட்பதாலும் நினைத்த காரியங்கள் கைகூடும். புராணங்கள் பற்றிச் சொற்பொழி வினுக்கு ஏற்பாடு செய்பவர்கள், நீண்ட ஆயுளுடன், உடல் நலத்துடன், மனமகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று அக்னி புராணம் பேசுகிறது. சொற்பொழிவாற்றுபவருக்குத் தகுந்த சன்மானம் கொடுக்க வேண்டும் என்றும் அக்னி புராணம் மேலும் கூறுகிறது.