பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 பதினெண் புராணங்கள் விடுதலை செய்கின்றது. செயல் என்பது பரப் பிரம்மத்தில் இருந்து தோன்றுவதாகும். இதை அறிந்த ஆத்மா தாமரை மலரில் இருக்கும் பனித்துளிபோல் மிகப் பரிசுத்த மானது. இந்த ஞானம் பெற்றவன் எல்லாப் பொருளிலும் தன்னையும், தன்னில் எல்லாப் பொருளையும் காண்கிறான். விஷ்ணுவை நான்கு வகைப்பட்ட மனிதர்கள் வணங்கு கிறார்கள். துன்பத்தினால் நைந்து போனவர்கள் முதல் நிலையினர்; பொருட் செல்வம் தேடுபவர் இரண்டாவது வகையினர். மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டவர்கள். நான்காவது வகையைச் சேர்ந்தவர்கள் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள ஒருமைப்பாட்டை அறிந்தவர்கள். பரப் பிரம்மம் மிக அல்பமான புல்லினிடத்தும், பேராற்றலும் தூய்மையும் படைத்த ஞானிகளிடத்தும் கலந்து நிற்கிறது. உடம்போடு சேர்ந்த பொறிபுலன்கள் பயனற்றவை. உலகப் பொருள்களோடு தொடர்பை உண்டாக்கவே இவை பயன்படுகின்றன. பரப் பிரம்மம் பொறிபுலன்களைக் கடந்து நிற்பது. அதற்கென்று சில இயல்புகள் உண்டு என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம். பரப் பிரம்மமே அனைத்தையும் ஆக்கவும் அழிக்கவும் செய்கிறது. எல்லையற்ற பேராற்றலே பிரம்ம சொரூபம் ஆகும். ஒருசிலர் ஜீவாத்மா வுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள ஒற்றுமையை தியானத்தில் அறிகின்றனர். ஒருசிலர் நல்ல செய்கைகளின் மூலம் பரமாத்மாவை அறிகின்றனர். யம கீதை முன்னொரு காலத்தில் வஜ்ஜிரவா என்றொரு மன்னன் இருந்தான். அவனுக்கு நச்சிகேதா என்றொரு மகன் இருந்தான். வஜ்ஜிரவா ஒரு பெரிய யாகம் செய்து தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான். நச்சிகேதா