பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவிஷ்ய புராணம் 393 அந்தக் காலத்திலேயே வர்ணாசிரம தர்மத்தை மிறித் திருமணங்கள் பெருவழக்காய் நடந்திருக்க வேண்டும். தர்ம சாத்திரம் பற்றிக் கூறுகின்ற பவிஷ்ய புராணம் அதற்கு விரோதமாக நடைபெற்றுள்ள பிராமணப் பெண் களின் கலப்பு மணத்தை நியாயப்படுத்துவதற்காக, கிருஷ்ணனே மகப் பிராமணப் பெண்கள் யாதவர்களை மணந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்தார் என்று இப்புராணம் கூறுகிறது. இஸ்லாமியர் கதை, மொகலாயர் கதை என்பவையும் இஸ்லாமிய அரசுகள் காலத்தில் இதில் புகுத்தப்பெற்றிருக்க வேண்டும். இந்துப் புராணங்களின் அடிப்படை இப்புராணத்தில் தகர்க்கப்பட்டு இஸ்லாமியர் மொகலாயர் கதை புகுத்தப் பட்டதால், கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் ஆதாம், ஏவாள் கதை உள்ளே நுழைந்தது. புராணங்களுக்கிருந்த மதிப்பும் மரியாதையும் பெளராணிகர்களின் சந்தர்ப்ப வாதத்தால் எப்படிப் பறக்க விடப்பட்டன என்பதற்கு இப் புராணம் ஒர் உதாரணம்) ஒரு காலத்தில் முனிவர்கள் பலர் கூடி சதனிகா என்ற வேதவியாசரின் சீடரைச் சந்தித்து, “மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டிய நன்னெறி எது என்று அறிந்து கொள்ள விரும்புகிறோம். வியாசரின் சீடராகிய தாங்கள் அவரிடம் பலவற்றைக் கற்றிருப்பீர்கள். ஆகவே எங்களுக்கு நல்வழி நன்னடத்தை என்பவை பற்றிச் சொல்ல வேண்டும்” என்று கேட்டார்கள். சதனிகா, “நீங்கள் கேட்பது பொதுப்படையாக இருக்கிறது. உங்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று என் குருவிடம் கேட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வியாசரிடம் சென்று அவர்கள் விரும்பியதைக் கூறினார். வேதவியாசர், "என் மற்றொரு சீடனாகிய சுமந்துவிடம் சென்றால் உன் ஐயங்களைப் போக்குவார். ஆகவே, அவரிடம்