பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 பதினெண் புராணங்கள் செல்வாயாக’ என்று கூறினார். வியாசரின் கட்டளைப்படி சதனிகா, சுமந்துவை சந்திக்கப் போனார். அவர்களிடையே நடந்த நீண்ட உரையாடல்தான் பவிஷ்ய புராணம் என்ற பெயரில் வழங்கப் பெறுகிறது. பவிஷ்ய புராணம், பிரம்மனே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றையும் செய்கிறார் என்றும், அத்ரி முதலிய ஒன்பது முனிவர்களும், சுவயம்பு மனுவும் பிரம்ம ளிைடத்திலே தோன்றினார்கள் என்றும் கூறுகிறது. பிரம்மனின் தோற்றம், பணி ஆகியவற்றைக் கூறும் பொழுது ஏனைய புராணங்களினின்றும் இப்புராணம் மாறுபட்டுள்ளது. கணேசர் - மாறுபட்ட கதை தொடக்கத்தில் பிரம்மனால் படைக்கப்பட்ட மனிதர்கள் தாங்கள் விரும்பியதெல்லாம் செய்து வந்தனர். எந்தக் காரியத்திலும் இடையூறு என்று வந்ததே இல்லை. அப்படியே சில இடையூறுகள் வந்தாலும், அதனை எதிர்கொண்ட மனிதர்கள் வெகு எளிதில் அந்த இடையூறுகளைப் போக்கிப் பயனடைந்தார்கள். நாளாவட்டத்தில் நினைத்ததை எல்லாம் செய்து முடிக்க முடிகிறது என்ற எண்ணம் மனிதர்கள் மனத்தில் தோன்றி வலுப்பெறலாயிற்று. இதன் பயனாக ஆணவம், நெஞ்சழுத்தம், யாரையும் மதிக்காத தன்மை, தெய்வங்களிடத்து ஈடுபாடின்மை என்ற துர்க்குணங்கள் மனிதரிடம் படிய ஆரம்பித்தன. மனிதர்களின் இந்தப் போக்கைக் கண்ட பிரம்மன் இவர்களுக்கு புத்தி கற்பிக்க வேண்டும். அதற்குரிய தெய்வத்தை நான் உண்டாக்கப் போகிறேன் என்ற முடிவுடன் கணேசரைப் படைத்தார். அதன் பிறகு சிறியதோ, பெரியதோ யார் எந்தக் காரியத்தைச் செய்வதானாலும் கணேசருடைய உதவி நாடவேண்டி வந்து விட்டது. கணேசரை வேண்டிக் கொள்ளாமல் செய்யப்பட்ட