பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 பதினெண் புராணங்கள் பட்டுள்ளது) இப்புராணத்தில் பவிஷ்ய புராணம்) இக்கதையில் சில மாற்றங்கள் உள்ளன. துரிய வழிபாடு செய்பவர்கள், பவிஷ்ய புராணத்தின்படி மூன்று வகைப்பட்டவர்கள். துரிய வழிபாடு செய்யும் மகர்கள். இரண்டாவது கூட்டம் அக்னியை வழிபடும் மகர்கள். மூன்றா வது சூரியனை வழிபாடு செய்யும் போஜகர்கள். முதல் இரண்டு இனத்தாரைப் பொறுத்தமட்டில் மகர்கள் என்ற அவர்கள் இனப் பெயரிலுள்ள மா என்ற எழுத்தே சூரியனைக் குறிப்ப தாகும். இக்கூட்டத்தார் எண்ணோடு சூரியனை வழி படுவதோடு உணவு சாகுபடி சூரியனுக்காக என்று கருதி னார்கள். தாங்கள் சமைத்த உணவை, சூரியனுக்கு நிவேதனம் செய்த பிறகே உண்ணும் பழக்கம் உடையவர்கள் ஜம்புதுவீபத் திற்கு அப்பால் உள்ள சகதுவீபாவில் தோன்றியவர்கள். கிருஷ்ணன், ஜாம்பவதி என்பவளை மணந்து அவள் மூலம் சம்பா என்ற மகனைப் பெற்றான். ஏதோ காரணத் திற்காகக் கிருஷ்ணனே தன் மகனாகிய சம்பாவை, தொழுநோயாளியாக ஆகுக என்று சபித்து விட்டான். இந்த சாபத்தோடு சகதுவீபாவிற்கு வந்தான். சகதுவீபத்தில் இருந்த பிராமணர்கள் சூரிய வழிபாட்டில் வல்லவர்கள். அவன் அரும்பாடுபட்டு சூரியனுக்கு சந்திரபாகு நதிக்கரையில் ஒரு பெருங்கோயிலைக் கட்டினான். ஆதலால் அவர்களை வரவழைத்து தான் கட்டிய சூரியன் கோயிலில் பூசை செய்யுமாறு ஏற்பாடு செய்தான். மகப்பிராமணர்கள் தாடி வளர்த்தார்கள். ஏனைய பிராமணர்கள் போல பூணுரலைத் தோளில் இருந்து இடம் வலமாகப் போடாமல், இடுப்பில் கட்டிக் கொண் டார்கள். அந்த பிராமணர்கள் இறந்த உடலைத் தொடவே மாட்டார்கள். அவர்கள் உண்ணும் பொழுது வாய்