பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவிஷ்ய புராணம் 399 மில்லை. சூரியன் முன்னர் உள்ள மக்கள் தொகுதியில், போஜகர்களைவிடச் சிறந்தவர் யாருமில்லை, போஜகர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் சூரியன் செய்ததாகக் கருதப்படும். இம்முறையில் வளர்ச்சி அடைந்த அவர்கள் சாதாரண பிராமணர்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதப் பட்டனர். ஒருவன் முக்தி அடைய வேண்டுமானால், போஜகனாகப் பிறந்துதான் அந்தப் பதத்தை அடைய முடியும். போஜகர் தோன்றிய கதை: முன்னொரு காலத்தில் சகதுவீபத்தில் சுவயம்புமனுவின் மகனாகிய பிரியவ்ரதா என்பவன் சூரியனுக்கு மிகச் சிறந்த கோயில் ஒன்றைக் கட்டினான். கோயிலினுள் தங்கத்தால் செய்யப்பட்ட சூரியனுக் குரிய விக்கிரகம் ஒன்றனை அமைத்துவிட்டான். ஆனால் எவ்வளவு முயன்றும், சூரிய பூஜையை சாஸ்திரங்களில் சொல்லியபடி செய்யக்கூடிய ஒரு பூசாரியையும் அவன் காண முடியவில்லை. மனம் வருந்திய பிரியவ்ரதா சூரியனை நோக்கித் தவம் இருந்தான். சூரியன் நேரே வந்து, என்ன வரம் வேண்டும் என்று கேட்க, தான் அமைத்த கோயிலில் நித்திய பூசைகளைச் செய்வதற்குத் தக்க ஆள் கிடைக்கவில்லை. எனவே அதற்குரிய பூசாரிகள் கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். மகிழ்ந்த சூரியன், தன் நெற்றி யிலிருந்து இருவரையும், கைகளிலிருந்து இருவரையும், கால்களிலிருந்து இருவரையும், ஒளியிலிருந்து இருவரையும் ஆக எட்டுப் பேரை சேர்த்துக் கொடுத்தான். இந்தப் பரம்பரை யினரே போஜகர்கள் எனப்பட்டனர். கோயில்களும், விக்கிரகங்களும்: பவிஷ்ய புராணத்தின் படி, கோயில் கட்டுவதென்பது, ஒரு யாகம் செய்வதால் கிடைக்கும் புண்ணியத்தையும், பொதுமக்களுக்கு என குளம் முதலியன வெட்டுவதால் கிடைக்கும் புண்ணியத்தையும் சேர்த்துக் கொடுப்பதாகும். தெய்வங்கள் ஏரிகள், குளங்கள்,