பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 பதினெண் புராணங்கள் நந்தவனங்கள், செடி கொடிகள் ஆகிய சுற்றுச்சூழல் அமைந்த இடத்தில்தான் விருப்பத்தோடு தங்குவார்கள். அன்னப்பறவை களின் இனிய ஓசை தெய்வங்களுக்கு விருப்பமானது. கோயில்கள் கண்ணுக்கு அழகும், மனத்துக்கு ரம்மியமும் தரக் கூடியனவாகக் கட்டப்பெற வேண்டும். எல்லாவகையான பூமியும் கோயில் கட்டுவதற்கு ஏற்றதன்று. எலும்புகள், முடி, சுண்ணாம்பு, நிலக்கரி, உமி முதலியவை புதைந்துள்ள பூமி ஏற்றதன்று. எல்லாவிதமான தானியங்களும், முளைக்கக்கூடியதான வளமான பூமி, கோயில்கட்ட ஏற்றதாகும். தரையைத் தட்டினால் தம்பட்டம் அடிப்பது போன்ற சப்தத்தை அப்பூமி உண்டாக்கினால் அது கோயில் கட்டச் சிறந்த இடம் பிராமணன் கோயில் கட்டினால் வெள்ளை மண்ணிலும், சத்ரியன் கட்டினால் சிவப்பு மண்ணிலும், வைசியன் மஞ்சள் மண்ணிலும், சூத்திரன் கறுப்பு மண்ணிலும் கோயிலைக் கட்ட வேண்டும். கோயில் கட்டுவதற்குரிய பூமியைத் தேர்ந்தெடுப்பதற்கு பவிஷ்ய புராணம் ஒரு வழியைச் சொல்கிறது. கோயில்கட்டத் தேர்ந்தெடுக்கும் பூமியில் ஒரு குழியினை வெட்ட வேண்டும். பிறகு அக்குழியினை, அதிலிருந்து எடுத்த மண்ணாலேயே நிரப்ப வேண்டும். குழி நிரம்பிய பிறகு கொஞ்சம் மண் மிஞ்சினால் அது சிறந்த இடமாகும். குழியில் மண் போட்டு, குழி நிரம்பிவிட்டால் அது மத்யமான இடமாகும். வெளியில் எடுக்கப்பட்ட மண் குழியினை நிரப்பவில்லை எனில், அது கோயில் கட்டுதற்கு ஏற்ற இடமன்று. சூரியனுக்குக் கட்டப்படும் கோயில், மிகச் சிரத்தையுடன் நிர்மாணிக்கப்பட வேண்டும். கோயிலின் வாயில் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி இருக்க வேண்டும். கோயிலின் தெற்குப் புறத்தில் குளமும், வடக்குப் புறத்தில் அக்னியை வணங்க சூரியன் கோயிலுக்குத் தனி இடமும் ஒதுக்கப்பட வேண்டும். சிவன், பிரம்மா, விஷ்ணு