பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 பதினெண் புராணங்கள் விரதம் என்பது ஒருவர் சந்திரன் உதயமாகும் வரை மெளனமாக இருப்பது. அவ்வாறு பேசாமல் இருக்கும் பொழுது எல்லா தெய்வங்களையும் ஒரே சமயத்தில் வணங்க வேண்டும். இவ்விரதத்தை மேற்கொள்பவருக்கு முன் ஜென்மத்து நினைவுகள் தோன்றப் பெறும். ஒருவர் புண்ணியம் பெறுவதற்காக, விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும் என்பதன்று. ஒரு விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், விதிகள் ஆகிய வற்றைப் படிப்பதனாலும் புண்ணியம் கிடைக்கும். உதாரணமாக, ரசகல்யாணி விரதம் எடுப்போர், பார்வதி தேவியின் விக்கிரகத்திற்கு நெய் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். இவ்விரதத்தை அனுஷ்டிக்கும் முறையினைப் படிப்பவர்கள், அன்றி இவ்விரதம் மேற்கொள்ளும்படி மற்றவர்களைத் தூண்டுபவர்கள், பார்வதியின் இருப்பிடம் அடைகின்றனர். அவர்களுடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பெறும். அர்த்தநாரி விரதம், சிவன்-பார்வதியை வணங்குவதாகும். இவ்விரதம் பற்றிய விதிகளைப் படிப்ப வர்கள், அல்லது மற்றவர்களை இவ்விரதம் மேற்கொள்ளுமாறு தூண்டுபவர்கள் இந்திரனின் இருப்பிடத்தை அடைவர். இவை அனைத்தும் விரதங்கள் மேற்கொள்ளுவதால் ஏற்படும் நன்மைகள். அசலன மனத்துடன் இறைவனை வழிபடுவது, விரதத்தினை முழுமையாக முடிக்காமல் அரை குறையாக நிறுத்துவது ஆகியவை தேவர்களின் கோபத்தை அதிகரிக்கும். அவ்வாறான தவற்றினைச் செய்தவர்கள், அகண்டதுவாதசி விரதம் இருந்து விஷ்ணுவின் மந்திரம் கூறி அவரது அருளைப் பெறவேண்டும். பெரும்பான்மையான விரதங்கள் பெண்களுக்கென்றே ஏற்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஒர் அசுவமேதயாகம் செய்து கிடைக்கும் புண்ணியத்திற்கு நிகராக, ஆனந்த திரிதியை விரதம் இருந்து,