பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவிஷ்ய புராணம் 411 பாதியாகக் கருதப்படுகிறாள். எந்தக் குடும்பத்தில், மனைவிக்கு மதிப்பு இல்லையோ அக்குடும்பம் வீணாகிப் போகின்றது. ஒரு மனைவியின் கடமைகள் என்ன என்று பவிஷ்ய புராணம் கூறுகிறது. மனைவி ஆனவள், அதிகாலையில் எழுந்து, பணியாளர்களை எழுப்பி அன்றைக்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலையினைத் தெளிவுபடக் கூறவேண்டும். தன் கணவனுக்குத் தேவையான உணவு வகைகளைத் தயாராக வைத்துக்கொண்டு, அவன் வரவை எதிர்நோக்கி இருக்க வேண்டும். சமையலறையில், பாத்திரம் கழுவுதல், தயிர் கடைதல், தரை கழுவுதல், ருசியுள்ள உணவுகளைத் தயாரித்தல் ஆகிய வேலைகளைச் செய்ய வேண்டும். பெண்கள் சில காரியங்களைச் செய்யக் கூடாது என்று பவிஷ்ய புராணம் வலியுறுத்துகிறது. அவள் தனியாக அமர்ந்திருக்கக் கூடாது; அந்நியர்கள் அமர்ந்திருக்கும் பொழுது வாய்விட்டுச் சிரித்தல் கூடாது; வாயிற்புறத்தில் நிற்கக்கூடாது; சத்தம் போட்டுப் பேசக் கூடாது; கணவன் இல்லாதபொழுது தன்னை அலங்கரித்துக் கொள்ளுதல் தவறாகும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே தனியே வெளியே செல்லலாம், ஆயினும் விரைவில் வீடு திரும்பிவிட வேண்டும். ஒரு பெண் கருவுற்றிருக்கும் பொழுது, வாசனை திரவியம் கலந்த நீரில் குளிக்க வேண்டும். பெரிய குரலெழுப்பி சிரிக்கக் கூடாது நற்பண்புகள் உடையவர்களிடையே பொழுதைக் கழிக்க வேண்டும் காட்டுப்பகுதியில் தனியே செல்லக் கூடாது; ஆற்றில் தனியாகச் சென்று கடக்கக் கூடாது. பவிஷ்ய புராணம், கணவன், மனைவியரிடையே கருத்து வேற்றுமை ஏற்படின், அவர்கள் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று கூறுகிறது. மனைவி குழந்தை பெறும் பாக்கியம் அற்றவளாக இருப்பின், கணவன் எட்டு ஆண்டுகள் பொறுத்து விவாகரத்து செய்யலாம் என்று கூறுகிறது. மனவேற்றுமை காரணமாக