பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவிஷ்ய புராணம் 415 9. கன்வர்கள் : தேவ பூமி என்ற அரசனை வீழ்த்திவிட்டு கன்வ அரசை ஸ்தாபிப்பான். கன்வ பிராமணர்கள் 45 ஆண்டுகள் ஆட்சி புரிவர். 10. ஆந்திரர் : கன்வர்களிடம் இருந்து பூமியைப் பெற்று 30 ஆந்திர அரசர்கள் 460 ஆண்டுகள் ஆண்டனர். சூரியனும் அதன் பன்னிரு வகைக் கூறுகளும் துரியதேவன் தன் பண்புகளை பன்னிரு ரூபங்களாகக் கொண்டுள்ளான். அவையாவன: 12 ஆதித்தியர்கள் என்று கூறப்பெறும். அவை இந்திரா, ததா, பர்ஜன்யா, புஷா, துவஷ்டா, ஆர்யமா, பகாவைவஸ்வனா, விஷ்ணு, அம்o, வருணா, மித்ரா ஆகியவை. இந்திரனாக தேவர்களின் தலைவனாகவும், அவர்களின் அரசனாகவும் இருக்கிறான். ததாவாக எல்லா உயிரினங் களையும் படைக்கின்றான். பர்ஜன்யனாக மேகங்களினிடையே வாழ்ந்து, மழையைத் தோற்றுவிக்கின்றான். புஷாவாக எல்லா தானியங்களிலும் வாழ்ந்து, உயிர்களுக்கு சத்துள்ள உணவைப் படைக்கின்றான். துவஷ்டாவாக, மரங்கள், கொடிகளில் வாழ்கின்றான். ஆர்யமாவாக மேகத்திலிருந்து, உயிர்களுக்கு மூச்சுக் காற்றை வழங்குகின்றான். பகாவாக பூமியிலும், உயிரினங்களின் உடம்பிலும் வாழ்கின்றான். வைவஸ்வனா வாகத் தீயில் இருந்து, உணவினைச் சமைக்க அருள்கின்றான். விஷ்ணுவாக, தேவர்களின் பகைவர்களைக் கொல்லுகின்றான். அம்oவாகக் காற்றில் இருந்து எல்லா உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கின்றான். வருணனாக நீரில் இருந்து, உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதவனாகிறான். மித்ராவாக சந்திரபாக் நதிக்கரையில் தோற்றம் தருகிறான். சூரியதேவனின் பன்னிரு தோற்றங்களைப் பற்றியும் அறிந்து கொள்பவர்கள் சூரியதேவனுடன் வாழ்கின்ற