பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 பதினெண் புராணங்கள் சகதுவீபம் இந்த பூமி ஏழு துவீபங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: ஜம்புதுவீபம், பலக்ஷதுவீபம், வில்மலதுவீபம்; குசத்துவீபம் கிரெளஞ்சதுவீபம், புஷ்கர துவீபம் சகதுவீபம் ஆகியவை. பரதவர்ஷம் ஜம்பு துவீபத்தில் அமைந்து உள்ளது. சகதுவீபத்தைச் சுற்றி தாதி சமுத்திரம் சூழ்ந்துள்ளது. இந்த துவீபத்தில் உள்ளவர்கள் நீண்டநாள் வாழ்க்கை உடையவர் களாகவும், புண்ணியம் செய்தவர்களாகவும் இருக்கின்றனர். பஞ்சம், நோய், முதுமை இவை அந்த அரசாட்சியை நெருங்க வில்லை. இங்கு நவரத்தினங்கள் நிரம்பப் பெற்ற ஏழு வெண்மையான மலைகள் உள்ளன. இங்குள்ள நதிகளில், ஆபரணங்கள் கிடைக்கப்பெறும். முதலாவது மலை மேரு எனப்படும். இங்குதான் முனிவர்களும், கந்தர்வர்களும் வாழ்கின்றனர். கிழக்குப் புறமாக சிறிது சாய்ந்தாற்போல் இருக்கும் மலை உதயா எனப்படும். இம்மலை உச்சி தங்கத்தினால் ஆனது. மூன்றாவது மலை மகாகிரி எனப்படும். இம்மலை ஆறுகளால் சூழப் பெற்றது. இந்த ஆறுகளில் இருந்து இந்திரன் நீர் எடுத்துச் சென்று மேகங்களாக மாற்றுவான். நான்காவது மலை ரைவடகா. இதிலிருந்து ரேவதி என்னும் நட்சத்திரத்தை எப்பொழுதும் பார்க்கலாம் என்பதினால் இம்மலை முகட்டிற்கு ரைவடகா என்ற பெயர் வந்தது. இம்மலை சகதுவீபத்தின் சொர்க்கம் எனப்படும். ஐந்தாவது மலை சியாமா எனப்படும். இது கருமை நிறம் கொண்டது. ஆறாவது மலை அந்தகிரி எனப்படும். இது வெள்ளியைப் போன்ற நிறமுடையது. ஏழாவது மலை அம்பிகேயா எனப்படும். இம்மலை எப்பொழுதும் பனியால் மூடப்பட்டு இருக்கும். நுழைவதற்கு மிகவும் கடினமானது.