பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம வைவர்த்த புராணம் 439 வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்திலிருந்து நீரைக் குடிப்பவர்கள் வைகுந்த லோகம் செல்வர். துளசி இறந்த பிறகு வைகுந்த லோகம் அடைந்தாள். அவளுடைய முடி கந்தகி நதியானது. நாராயணன் கந்தகி நதிக்கரையில் ஒரு மலையாக நின்றார். இம்மலையில் வஜ்ரகிதா என்ற பூச்சிகள் காணப்பட்டன. இப்பூச்சிகளின் பற்கள் கூர்மை உடையனவும், கெட்டியானவையும் ஆகும். ஆதலால் இப்பெயர் வழங்கப்பட்டது. இப்பூச்சிகள் அம்மலையில் காணப்படும் கற்களைத் துளையிடுகின்றன. அவையே சாலக்கிரமம் எனப்படும். சங்கசுதாவைக் கொன்ற சிவபெருமான், அரக்கனின் உடலைக் கடலில் வீசி எறிந்தார். அவ்வுடம்பின் எலும்புகளில் இருந்து வெவ்வேறு சங்குகள் உற்பத்தி ஆயின. இவை மிகவும் சிறப்புப் பெற்றவை. சங்குகளில் நீரை ஊற்றி, சிவனைத் தவிர எல்லா தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரு வீட்டில் சங்கு வைத்து ஊதப்பட்டால், இலட்சுமி என்றும் அங்கு வாசம் செய்வாள். சாவித்திரி சாவித்திரி என்றால், பிறப்பைக் கொடுப்பவள் என்பது பொருள். வேதங்கள் தோன்றியது சாவித்திரியிடமிருந்து தான். சூரியனுக்கும், மந்திரங்களுக்கும் தேவதையாக விளங்குகின்றாள். தங்க நிறமும், ஆபரணங்கள் அணிந்தும், புன்னகையுடனும் தோற்றம் தருபவள். சந்தனம், நீர், அரிசி முதலியவைகளைப் படைக்க வேண்டும். இத்தேவிக்காக அனுஷ்டிக்கப்படுவது சாவித்ரி விரதம் எனப்படும். ஜேஷ்டமாதங்களில், பதின்மூன்றாம் நாள் திரயோதசி திதியில் பதினான்