பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம வைவர்த்த புராணம் 441. பூமியில் வாழ்ந்த பிறகு கோலோகம் செல்ல வேண்டும் என்ற வரத்தையும் பெற்றாள். மேலும் யமதர்மன், சாவித்திரிக்கு தானம் செய்வது பற்றியும் சடங்குகள் பற்றியும் கூறத் துவங்கினார். நிலம், அரிசி முதலியவற்றை தானம் செய்பவர்கள் விஷ்ணு லோகத்திற்கும், வீடு ஒன்றினை தானமாகக் கொடுப்பவர்கள் தேவலோகத்திற்கும், தங்கம், தாமிரம், கன்று முதலானவற்றை தானமாகக் கொடுப்பவர்கள் சூரிய லோகத்திற்கும், செல்வர். சிவராத்திரி அன்று, சிவனை வில்வ இலைகளால் துதிப்பவர்கள் சிவலோகத்திற்கும், ராமநவமி அன்று விரதம் இருப்பவர்கள் விஷ்ணு லோகத்திற்கும், கிருஷ்ணன் கோபியர்களுடன் விளையாடுவது போல் வடிவம் அமைத்து (ரஸ்மண்டல) அதனைக் கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்று வணங்கி வந்தால் கோலோகாவில் இடம் பெறலாம். சுக்கில பட்சம் பதினோராம் நாள் ஏகாதசி விரதம் இருப்போர் வைகுந்தலோகம் அடைவர். பதினான்காம் நாள் சாவித்திரியை ஜேஷ்ட மாதத்தில் விரதம் இருந்து அனுஷ்டிப்போர் பிரம்ம லோகமும், மகா மாதம் பஞ்சமி திதி அன்று சரஸ்வதியை வழிபடுவோர் வைகுந்த லோகம் அடைவர். அஸ்வமேத யாகம் செய்பவர்கள் இந்திரபதவியில் பாதிப் பங்கினைப் பெற்று, ஒரு குதிரையின் மேல் இருக்கும் ரோமம் விழும் வரை அரசாளலாம். ராஜதுய வேள்வி அசுவமேத யாகத்தைப் போன்று நான்கு மடங்கு சிறப்புப் பெற்றது. இவை அனைத்தையும் விட மிகச் சிறப்புப் பெற்றது விஷ்ணு யாகம். ஒராயிரம் ராஜதுய வேள்வி செய்வதற்கு இணையாகப் பேசப்படும் ஒருமுறை விஷ்ணு யாகம் செய்வது. இவற்றை அடுத்து, சாவித்திரி தேவிக்கு நரகங்கள் பற்றிய விளக்கங்களை யமன் கூறினான்.