பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம புராணம் 21 எனவே தன் அமைச்சர்கள், படைகள் ஆகியோருடன் சிறந்ததோர் இடத்தைத் தேடிப் புறப்பட்டு விட்டான் இந்திர தூய்மன். நீண்ட தேடலுக்குப் பிறகு கடற்கரையை அடைந்தான். இக்கடற்கரைப் பகுதியில் சில காலம் வசித்த பிறகு மிக்க அழகு வாய்ந்ததும், இயற்கை எழில் கொஞ்சு வதும், பறவைகள் மகிழ்ந்து திரிவதுமான புருஷோத்தம rேத்திரம் என்ற இடத்தை அடைந்த அரசன், தான் நினைத்த ஆலயத்தைக் கட்ட இதுவே சிறந்த இடம் என்ற முடிவுக்கு வநதான. மிக அழகிய இந்தப் பகுதிக்கு புருஷோத்தம rேத்திரம் என்று பெயர் வந்ததற்கு ஒரு காரணமுண்டு. பல காலத்திற்கு முன் விஷ்ணுவின் சக்தியின் பெரும்பகுதி பெற்ற மகா விஷ்ணு விக்கிரகம் இந்த இடத்தில் இருந்தது. யார் வந்து அதனை ஒருமுறை தரிசித்தாலும் அவருடைய பாபங்கள் அனைத்தும் அப்பொழுதே நீங்கிவிடும். எனவே மக்கள் அனைவரும் இங்கு வந்து இந்தச் சிலையை தரிசித்து பாபங் களினின்று நீங்கினதால் எமனுக்கு வேலையில்லாமல் போயிற்று. வேலை இல்லாத திண்டாட்டத்தில் அவதிப்பட்ட எமன் மகாவிஷ்ணுவை வணங்கித் தன் குறையைத் தெரிவித்தான். அவனுடைய குறையைப் போக்க வேண்டி மகாவிஷ்ணு இந்தப் பிரசித்திபெற்ற சிலையை மணலுக்குள் புதைத்து விட்டார். இப்பொழுது முன்போல மக்கள் வந்து உடனடியாகத் தங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ள முடிய வில்லை என்றாலும், ஊருக்கிருந்த மதிப்பு குறையாமல் இருந்தது. புருஷோத்தமன் என்பது மகாவிஷ்ணுவிற்கு ஒரு பெயராகும். எனவே அவரால் பிரசித்தி பெற்ற இந்த இடத்திற்குப் புருஷோத்தம நகரம் என்று பெயர் வந்தது இயல்பே. இந்த இடத்தைப் பார்த்தவுடன் இந்திர தூய்மன் மனத்தில் ஒரு நிறைவு ஏற்பட்டது. வேறு இடம் தேடிச்