பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(12. வராக புராணம்) இப்புராணம் பற்றி. வராகம் என்பது விஷ்ணு எடுத்த வராக அவதாரத் தைக் குறிக்கும். 24000 பாடல்களை உடைய முதல் வராக புராணம் இழக்கப்பெற்றதால், அந்த இடத்தை நிரப்ப 10,000 பாடல்களுடன் இப்போது காணப்படும் வராக புராணம் இயற்றிச் சேர்க்கப்பட்டுள்ளது. இது பொதுவாக இல்லாமல் வைஷ்ணவத்தைப் பற்றியே கூறுவதாகவும், விஷ்ணுவை வழிபடுவதற்கு ஒரு கையேடாகவும் அமைந்துள்ளது. மற்றைய புராணங்களில் காணப்படும் புராணத்திற்குரிய ஐந்து இலக்கணங்கள் இப்புராணத்தில் இல்லை. பாஞ்சராத்ரா ஆகமத்தை விரிவாகப் பேசும் இப்புராணம் அதை மிக உயர்த்திக் கூறி அதில் சொல்லப்பட்ட முறையில் விஷ்ணு வெளிப் பட்டால் மிக உயர்ந்த நற்பயன்களை அடையலாம் என்று சொல்கிறது. வராக புராணத்தில் விஷ்ணு என்ற பெயருக்கு பதிலாக நாராயணன் என்ற பெயரே வழங்கப் படுகிறது. அவதாரம் என்ற சொல்லுக்கு மேலிருந்து கீழிறங்குதல் என்பது பொருளாகும். தர்மம் தறிகெட்டு, அதர்மம் மேலோங்கும் பொழுது கடவுள் மனித шац,—31