பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 485 ஒழுங்கின்மை என்பவற்றிலிருந்து பூமியை வெளிக் கொணர்வது என்பதன் குறியீடாகும். யக்ஞம், வராகம் என்ற இரண்டு சொற்களும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்ற பொருளுடையதாகவும், ஒன்றில் ஒன்று கரைந்து ஒன்றாகி விடும் பொருளுடையதாகவும் இருப்பதை அறியலாம். முப்பத்தைந்து பல்வேறுபட்ட சொற்களால் யக்ஞ வராகம் அழைக்கப்படுகிறது. இந்தச் சொற்கள் அனைத்தும் யக்ஞத்தின் பல்வேறு பகுதிகளைக் குறிக்கின்ற சொற்களாகவும், வராகத்தின் பல்வேறு உறுப்புக்களைக் குறிக்கின்ற சொற் களாகவும் இருப்பது சிந்திக்கத் தக்கதாகும். 1) வேதபாதா : வராகத்தின் நான்கு பாதங்களும், நான்கு 2) யூபதம்ஷ்தரா : வராகத்தின் நீண்டிருக்கும் இரு கொம்புகளும் யாகத்தில் நடப்பட்டுள்ள யூபங்களாகும். 3) கிரதுதந்தா : வராகத்தின் பற்கள் யாகத்தில் செய்யப் படும் 64 வகை பலிகளைக் குறிக்கும். 4) சிட்டிமுகா : வராகத்தின் வாய் யாக குண்டமாகும். 5 அக்னிஜிக்வா : வராகத்தின் நாக்கு குண்டத்தின் நெருப்பாகும். 6) தர்ப்பலோமா : வராகத்தின் உடம்பில் உள்ள மயிர்கள் யாகசாலையில் உள்ள தர்பைப் புல்லாகும். 7) பிரம்மசீர்ஷா : வராகத்தின் தலை பிரம்மனுக்கு ஒப்பாகும். 8) அகோர திருக்ஷநாதரா : பகல் இரவு என்பவை வராகத்தின் இரு கண்களாகும். 9) வேதாங்க சுருதிபூஷ்ணா : வேதத்தின் ஆறு அங்கங்கள், வராகத்தின் காதுகளில் உள்ள குண்டலங்களாகும்.