பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 பதினெண் புராணங்கள் பூமியை நீருக்குள்ளிருந்து வெளியே எடுத்து விடுகிறார் விஷ்ணு. இதையே மகாபிரளயம் என்று கூறலாம். ஏனைய புராணங்கள் இந்த மகாபிரளயம் பற்றியோ, இதன் முடிவில் பரப்பிரம்மமோ, பொருள்களைத் தோற்றுவிக்கின்ற முறை பற்றியோ, மும்மூர்த்திகளைத் தோற்றுவிக்கின்ற முறை பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை. அந்தப் புராணங்கள் சொல்லும் பிரளயம் பிரம்மனுடைய ஒரு பகல் முடிந்து இரவு வரும்பொழுது ஏற்படுகின்ற சாதாரணப் பிரளயம் பற்றிய தாகும். அந்தப் பிரளயத்தின் முடிவில் எங்கும் நீரே நிறைந் திருக்கும். நாராயணன் உறங்குவார். இதை அடுத்து வராக புராணம், கல்பங்கள் பற்றியும், நில இயற்பொருள் இயங்கியற் பொருள், பிரம்மன் பிரபஞ்சம் படைத்த கதை ஆகியவை ஏற்கெனவே மற்றப் புராணங்களில் விவரிக்கப்பட்டிருப்பதால், இங்கு அதனைக் கூறவில்லை, நாரதர் கதை முன்னொரு சமயம் பிரியவரதா என்ற மன்னனைக் காண நாரதர் புறப்பட்டார். அவரைக் கண்ட அரசன் ஒரு முனிவருக்குச் செய்ய வேண்டிய உபசரணைகள் செய்து முடித்த பின், “முனிவரே! தாங்கள் எல்லா உலகமும் போய் வருகிறவர். சாதாரணமாக அல்லாமல், மிகச் சிறப்பான நிகழ்ச்சி ஒன்றனை எங்கும் கூற வேண்டுகிறேன்” என்று கேட்க, நாரதர் கூற ஆரம்பித்தார். ஸ்வேத துவீபம் என்ற பகுதியில் நிகழ்ந்த ஒன்றைக் கூறப் போகிறேன். மிக அழகியதும், குளிர்ச்சி பொருந்தியதுமான ஒரு ஏரி அங்கிருந்தது. ஏரி நிரம்ப தாமரை மலர்களும் இலைகளும் நிரம்பி இருந்தன. ஒரு தாமரை மலரின் பக்கத்தில் மிக அழகிய பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். அவள் நிற்பதைக் கண்ட நான், "அம்மா! நீ யார்? ஏன் இங்கு