பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 பதினெண் புராணங்கள் பஞ்சபூதங்களாகவும் அவற்றின் பேராற்றல்களாகவும் அவர் காட்சி அளிக்கிறார். அவனை உன்னுள்ளும் காணலாம். வெளியில் உள்ள எப்பொருளிலும் காணலாம். நாராயணனை எல்லாப் பொருளிலும் காண்பதுதான் உண்மையான ஞானம் எனப்படும்.” இப்பொழுது மன்னன் கபிலரைப் பார்த்து ஞானம் சிறந்ததா? செயல் சிறந்ததா? என வினா எழுப்பினான். உடனே கபிலர் ரைவியா, வசு இவர்களின் கதையைச் சொல்லத் துவங்கினார். ரைவியாவும் வகவும் பிரம்மனின் பரம்பரையில் வந்தவனாகிய வசு என்ற மன்னன் ஒருநாள் தேவகுருவாகிய பிரகஸ்பதியைக் காணப் புறப்பட்டான். அவனை வழியில் சந்தித்த சித்ரவதா என்ற கந்தர்வன், அரசனே! பிரகஸ்பதி இப்பொழுது அவர் வீட்டில் இல்லை. தேவர்களையும், ரிஷிகளையும் ஒரு கூட்டத்திற்கு வருமாறு பிரம்மா அழைத்திருக்கிறார். எனவே பிரகஸ்பதி அக்கூட்டத்திற்குச் சென்றுள்ளார். கூட்டம் நடைபெறுகின்ற இடத்திற்கு வெளியே நீங்கள் காத்திருந்தால், பிரகஸ்பதி வெளியே வரும்பொழுது அவரைச் சந்திக்கலாம் என்று கூறினார். கந்தர்வனின் யோசனையை ஏற்றுக்கொண்ட வசு மன்னன் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே பொறுமையோடு காத்திருந்தார். அவன் காத்திருக்கும் நேரத்தில் ரைவியா முனிவனும் பிரகஸ்பதியைக் காணவந்தார். வசு மன்னன் தங்கிய இடத்திற்குப் பக்கத்திலேயே முனிவனும் தங்கினான். சற்று நேரத்தில் பிரகஸ்பதி வெளியே வந்தார். இருவரும் எழுந்து மிக்க வணக்கத்தோடு பிரகஸ்பதியைக் கும்பிட்டனர். நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர் கேட்க, இருவரும் ஒரே குரலில், ஞானம் சிறந்ததா செயல்