பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 497 அனைவருக்கும் பிண்டம் போட்டதால் அவனுடைய பாட்டன், கொள்ளுப் பாட்டன் ஆகியவர்கள் செய்த பாவங்களில் இருந்து விடுபட்டுத் தூய்மை அடைந்தார்கள். சனத்குமாரன் சொல்லியதிலிருந்து கயையில், பிதுர்க் களுக்குப் பூஜை செய்வதால் அவர்கள் செய்த பாவங்களில் இருந்து உடனே விடுதலை அடைகிறார்கள் என்பதும் பிதுர்க் கடன் செய்பவர்கள் தாங்களும் பெரிய புண்ணியத்தைப் பெறுகிறார்கள் என்பதும் இக்கதையின் மூலம் தெரிய வருகிறது. சனத்குமாரர் மறைந்த பின் ரைவிய முனிவர் விஷ்ணுவை கதாதர சொரூபத்தில் தியானம் செய்தார். சிலகாலம் கழித்து விஷ்ணு அவருக்கெதிரே தோன்றி, என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, சனத்குமாரர் வாழ்கின்ற உலகில் தானும் சென்று வாழ வேண்டும் என்று முனிவர் கேட்க, அவ்வாறே ஆகட்டும் என விஷ்ணு வரம் கொடுத்தார். வைஷ்ணவி தேவி பிரபஞ்சம் பதினான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏழு பிரிவுகள் மேலுலகம் என்றும், மற்ற ஏழும் கீழுலகம் என்றும் கூறப்படும். மேலுலகம் என்று கூறப்படும் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகர்லோகம், ஜனலோகம், சத்யலோகம், தடலோகம் ஆகியவை. கல்பத்தின் முடிவில் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகியவை அழிந்துவிடும். மீதமுள்ள நான்கு லோகங்கள் மகாப்பிரளய காலத்தில் மட்டுமே அழிகின்றன. மக்கள் பூலோகத்திலும், பறவைகள் புவர்லோகத்திலும், நேர்மையும், தகுதியும் உள்ளவர்கள் சுவர்லோகத்திலும், முனிவர்கள் மகர்லோகத் திலும் உள்ளனர். ւI.ւ.-32