பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 499 அதன்படி ஒரு பெரிய அசுரப்படை மந்தர மலைக்கு வந்தது. தேவர்கள் அனுப்பிய படை அசுரர்களை எதிர்க்க முடியாமல் சின்னாபின்னப்பட்டு ஓடின. அப்பொழுது மகிஷனுடைய பணியாளர்களில் ஒருவராகிய வித்யுத்பிரபா என்பவர் வைஷ்ணவியிடம் சென்று, மகிஷனைவிடச் சிறந்த மாப்பிள்ளை கிடைப்பது முடியாத காரியம். ஆகவே அவனை மணந்து கொள் என்று புத்திமதி கூறினார். இத்தோடு நில்லாமல், வித்யுத்பிரபா, மகிஷனுடைய பழைய வரலாற்றையும் சொல்ல ஆரம்பித்தார். மகிஷனின் பூர்வக் கதை முன்னொரு காலத்தில் விப்ரசித்தி என்ற கொடிய அரக்கன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு மிக அழகான ஒரு பெண் இருந்தாள். மகிஷ்மகி என்ற பெயருடைய அவள், தன் தோழிகளோடு சேர்ந்து அழகிய பள்ளத்தாக்கு ஒன்றில் சென்று கொண்டு இருக்கையில், ஆற்றங்கரையில் அமைந்த அழகிய ஆசிரமம் கண்டார்கள். அந்த ஆசிரமம், அது அமைந்திருக்கும் சூழ்நிலை ஆகியவற்றைக் கண்ட மகிஷ்மகி அந்த ஆசிரமத்தைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். உள்ளே ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தாள். அவர் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டால், அந்த ஆசிரமம் தனக்குக் கிடைக்கும் என்று எண்ணிய மகிஷ்மகி ஒரு பெண் எருமை வடிவு கொண்டு ஆசிரமத்தின் வெளியே குழப்பம் விளைவித்தாள். பிறகு முனிவனை பயமுறுத்த அவ்வடிவுடன் உள்ளே நுழைந்தாள். முதலில் சற்று பயந்து போன முனிவர் உடனே தன் அறிவு விளக்கத்தால் அந்த எருமை மகிஷ்மகி என்பதைக் கண்டு விட்டார். கடுங் கோபம் கொண்ட அவர், நீ ஒரு பெண் எருமையாக நூறு ஆண்டுகள் திரிவாயாக என்று சாபமிட்டார். மகிஷ்மகி தன்