பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 பதினெண் புராணங்கள் வருமாறு கூறினார். கெளரமுக முனிவர், தன்னைக் காப்பாற்றும்படி சிந்தாமணி மாலையினை அடிக்க லட்சக் கணக்கான படைவீரர்கள் தோன்றி துர்ஜயனின் படையினை விரட்டி அடித்தனர். விரோசனன் கொல்லப்பட்டான். ஹத்ரி, சுஹத்ரி இருவரும் தத்தம் படைகளை உதவிக்கு அனுப்பினர். ஆனால் கெளரமுக முனிவர் விஷ்ணுவை வேண்ட, விஷ்ணுவும் தன் சக்கரத்தால் துர்ஜயன், அவன் சேனை அனைவரையும் அழித்தார். நொடி என்பது காலத்தின் மிகச் சிறிய அளவாகும். கண்ணை ஒருமுறை சிமிட்ட ஒரு நொடி ஆகும். விஷ்ணு ஒரு நொடிப் பொழுதில் துர்ஜயன் படைகளை அழித்தார். வடமொழியில் நிமிவு என்றும் பொருளையுடைய நொடிப் பொழுதில் படைகளை அழித்த இடம் நைமிசாரண்யம் எனப் பெயர் பெற்றது. மிகப் புண்ணியம் வாய்ந்த இந்தக் காட்டில் விஷ்ணு எப்பொழுதும் இருந்து வருகிறார். பிரபசா என்ற பெயருடைய நைமிசாரண்ய வனத்திற்கு வந்த முனிவர் கெளரமுகா அங்கு தவம் இயற்ற ஆரம்பித்தார். திதிகள் - கெளரமுக முனிவர், சிந்தாமணியிடம் வேண்டிக் கொண்டவுடன் லட்சக்கணக்கான வீரர்கள் அதிலிருந்து வந்தார்கள் அல்லவா? விஷ்ணுவின் அருளால் அவர்கள் மன்னர்களாகத் திகழ்ந்தார்கள். இந்த மன்னர்களில், ஒரு மன்னன் வழிவந்தவன் பிரஜபாலா என்ற அரசன். அவன் ஒருமுறை மகாதபா என்ற சக்திவாய்ந்த முனிவரைச் சந்திக்க அவரது ஆசிரமம் சென்றான். பிரஜபாலா மன்னனிடம் அவர் திதிகளைப் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் கூறினார். சில குறிப்பிட்ட திதிகளில், இறைவன் மீது பாடல்களைக்