பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 513 - பாழ்செய்தமையால் மிகுந்த கோபம் கொண்ட பிரம்மன் நாகங்களை நோக்கி, “என் படைப்புகளைப் பெரிதும் வீணாக்கிய நீங்கள், உங்கள் தாயினாலேயே அழிக்கப் படுவீர்கள்” என்று சாபமிட்டார். இதைக் கேட்ட நாகங்கள், பிரம்மனை நோக்கி, ‘ஐயனே! எங்களைப் படைத்த நீரே, எங்களுக்கு இப்படி ஒரு குணத்தினைக் கொடுத்தீர்கள். இக்குணத்தினாலேயே நாங்கள் மக்களைக் கடிக்கிறோம். எங்களுக்கு விஷத்தன்மையைப் படைத்த நீங்கள், எங்களை ஏன் குறை சொல்கிறீர்கள், நாங்கள் எப்படிப் பொறுப்போம்? என்று கேட்டனர். இதைக் கேட்ட பிரம்மன், நாகங்களுக்குத் தனி இடம் ஒதுக்கிக் கொடுப்பதாகவும் அவர்கள் அவ்விடத்தில் தங்கி இருந்தால், மனிதர்களுக்கும், நாகங்களுக்கும் சண்டை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறினார். பாதாள லோகத்தினை ஏழு பிரிவுகளாகப் பிரித்து, அதில் மூன்று பிரிவுகளில், நாகங்கள் தங்கள் இனத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்' என்றும் கூறினார். - (பிரபஞ்ச உற்பத்தி பற்றிப் புராணங்களிடையே சில வேறுபாடுகள் உள்ளன. தேவர்கள், மனிதர்கள், அரக்கர்கள், மற்ற உயிரினங்கள் அனைத்தும் பிரம்மனிவிருந்து தோன்றியவை என்று சிவ புராணங்களும், காசிய முனிவர் அவர் மனைவிகளின் பிள்ளைகளே தேவர்கள், மனிதர்கள், மற்ற உயிரினங்கள் என்று சில புராணங்கள் பேசுகின்றன. இங்குக் காணப்படும் முரண்பாடு பின்னே வருவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.) நாகங்களிடம், பிரம்மன் அடுத்த கல்பத்தில் காசிப முனிவருக்கும், அவன் மனைவி கத்ருவுக்கும் பிள்ளைகளாகப் பிறப்பார்கள் என்று கூறினார். காசிப முனிவர், தன் மனைவி шц.-33