பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/543

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 பதினெண் புராணங்கள் கத்ருவின் விருப்பப்படியே அவள் ஆயிரம் நாகங்களைப் பெற்றெடுப்பாள் என்று வரம் கொடுத்தார். மற்றொரு மனைவியான வினதாவிடம், அவள் விருப்பப்படியே இரண்டு பிள்ளைகள் பெறுவாள் என்றும், அவர்கள் கத்ருவின் மக்களை விடப் பலம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் வரம் கொடுத்தார். கத்ருவிற்கு ஆயிரம் பாம்புகள் மக்களாகத் தோன்றினர். வினதாவிடம் இருந்து இரண்டு முட்டைகள் தோன்றின. நெடுநாட்கள் முட்டையினின்று எதுவும் வெளி வராததால், பொறுமையிழந்த வினதா ஒரு முட்டையை உடைத்தாள். அதிலிருந்து அங்கஹlனமுள்ள உருவம் வெளி வந்தது. அருணா என்ற பெயருடைய அவ்வுருவம், தன் தாயின் பொறுமை இன்மையால் தன் உருவம் பாழ்பட்டது என்பதால், தன் தாய் கத்ரு தனக்கு ஐந்நூறு ஆண்டுகள் அடிமையாக இருக்க வேண்டும் என்றும், மற்றொரு முட்டையினை உரிய காலம்வரை பத்திரமாக வைத்திருந்தால் அதிலிருந்து தோன்றும் மகன் தன் தாயினை விடுவிப்பான் என்றும் கூறினான். பின்பு, ஆகாயத்திற்குச் சென்று சூரியதேவனுடைய தேர்ப் பாகனானான். இதற்கிடையில் வினதாவிடம் இருந்து தோன்றிய மற்றொரு முட்டையிலிருந்து பாதி பறவையும், பாதி மனிதனும் சேர்ந்த உருவம் தோன்றிற்று. அதற்குக் கருடன் என்பது பெயர். பாம்புகளே தனக்கு இரையாக வேண்டும் என்ற வரத்தினை இந்திரனிடம் இருந்து கருடன் பெற்று வந்தது. கருடன் தன் தாயினை அடிமைத் தளையினின்று விடுவிக்க விரும்பியது. இதை அறிந்த பாம்புகள், தங்களுக்கு அமிர்தம் கொண்டு வந்து கொடுத்தால், கருடனின் தாய் வினதாவை விடுவிப்ப தாகக் கூறின. கடுமையான முயற்சிக்குப்பின் அமிர்தத்தைக் கொண்டு வந்தது கருடன். அமிர்தத்தை பாம்புகளுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, சொரசொரப்பான விளிம்புகளை