பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 515 உடைய தர்ப்பைப் புல்லைக் கொடுத்தது. அதனாலேயே பாம்புகளுக்குப் பிளவுபட்ட நாக்கு ஏற்பட்டது. அதனாலேயே பாம்புகளுக்கும், கருடனுக்கும் பெரும் பகை ஏற்பட்டது. கருட மந்திரம் சொல்பவர்களப் பாம்புகள் தீண்டுவ தில்லை. சஷ்டி சுக்கிலபட்சம் ஆறாவது நாள் சஷ்டி எனப்படும். இந்நாளில் கார்த்திகேயனைத் துதிப்பவர்களுக்கு நீண்ட ஆயுளும், நினைத்த காரியங்களும் கைகூடும். சஷ்டி அன்றுதான், பிரம்மன் கார்த்திகேயனைப் படைத் தளபதியாக நியமித்தார். அசுரர்களில் ஹிரண்ய கசிபு, ஹிரண்யாகூடின், விப்ர சித்தி ஆகியோர் திறம்படப் போர் செய்தனர். தேவர்கள் படைப்பில் இந்திரன் மட்டுமே திறம்படப் போர் செய்யக் கூடியவன். இதனால் அசுரர்கள் தேவர்களை விரைவில் வென்று விடுவர் என்று கருதி, பிரகஸ்பதி முனிவர் ஒரு நல்ல படைத் தளபதியைத் தேர்ந்தெடுக்கும்படி கூறினார். ஆகையால் தேவர்கள், பிரம்மன் தலைமையில் சிவனைச் சென்று சந்தித்து உதவி கோரினர். சிவனும், பார்வதியும் அழகும், பலமும் பொருந்திய மகனைத் தோற்றுவித்தனர். அந்த மகனே குமாரன், ஸ்கந்தன், கார்த்திகேயன் என்று அழைக்கப் பட்டான். அந்தக் கார்த்திகேயனையே பிரம்மா படைத் தளபதியாக நியமித்தார். சப்தமி சுக்கிலபட்சம் ஏழாம் நாள் சப்தமி எனப்படும் சூரிய தேவனுக்கு உகந்த நாள். சூரியனுடைய கதிர்களின் மிகு வெப்பம் காரணமாகப் பிரபஞ்சத்திலுள்ள உயிரினங்கள் அழிந்துவிடும் அபாயம் தோன்றிற்று. சப்தமி அன்று, மற்ற