பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வராக புராணம் 521 பெருமான், சந்திரனை எடுத்துத் தன் தலையில் சூடிக் கொண்டார். மேலே கூறிய நிகழ்ச்சிகள் அனைத்தும் பெளர்ணமி அன்று நடைபெற்றதால் பெளர்ணமி விரதம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விரதத்தினை முடித்த பின்னர் ஒருவர் அரிசிச்சோறு சாப்பிடலாம். இவ்விரதம் அனுஷ்டிப்ப வர்களுக்கு எல்லாச் செல்வமும் கிடைக்கப் பெறும். விரதங்கள் பிருத்வி வராகத்தைப் பார்த்து விரதங்கள் பற்றி அறிய விரும்புகிறேன் என்று சொல்லியவுடன் வராகம் கூறத் தொடங்கியது. “விரதங்கள் பலவகைப்படும். முதல்வகை பிரமச்சரியம், சத்தியம் காத்தல் ஆகிய இரண்டையும் தலையாய கடமையாகக் கொண்டது. இரண்டாவது பஜனை செய்தல், இறைவனின் புகழைப் பாடுதல் ஆகியவையாவன. மூன்றாவது வகை குறிப்பிட்ட நாட்களில் பட்டி இருத்தல் ஆகியவையாம். இதுபற்றிப் பல கதைகள் சொல்லலாம் எனினும், உதாரணத்திற்கு ஒன்றிரண்டைச் சொல்கிறேன். துர்வாசர் ஒருமுறை அவருக்கு நண்பனாக இருந்த ஒரு வேடனுக்கு சத்யதபா என்று பெயர் சூட்டினார். காரணம் அவன் வேடனாகப் பிறந்தும் நேர்மை, சத்தியம் என்ற இரண்டிற்கும் பெருமதிப்புக் கொடுத்து வாழ்ச் ல் கடைப் பிடித்தான் ஆதலின் அவனுக்கு இந்தப் பெயரைத் தந்தார். ஒருமுறை வராகம் பிருத்விக்குக் கூறிய ரகஸ்யமான ஒரு விரதச் சடங்கை துர்வாசர் இப்பொழுது சத்யதபாவிற்குக் கூறினார். ஏகாதசி அன்று பட்டினி கிடந்து துவாதசி அன்று காலையில் ஆற்றுக்குச் சென்று, ஆற்று மண்ணை உடம்பில் பூசிக் கொண்டு நாராயணனை நினைத்தவாறே நீந்திக் குளிக்க வேண்டும். பிறகு வந்து உணவு கொள்வதே துவாதசி விரதத்தின் மகிமை. இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாய் இருந்தாலும் பிரம்மத்தை