பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 பதினெண் புராணங்கள் அடையும் வழியை அவர்கள் அடைய முடியும். இந்த விரதம் மார்கழி மாதத்தில் அனுஷ்டிக்கப்பட வேண்டும். இதே போன்று வராக துவாதசி விரதத்தை மாசி மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டும். இந்த விரதத்திற்கு வராகத்தின் வடிவத்தைச் செய்து, அதை வெள்ளைத் துணியால் உடுத்தி மண்பானையில் வைத்து பகலில் பூஜிப்பதுடன் ஏகாதசி இரவு கண் விழித்து பூஜித்தால் சிறந்த பயன் உண்டு. இவற்றை அல்லாமல் ராம துவாதசி ஆனி மாதத்தில் கிருஷ்ண துவாதசி ஆடி மாதத்திலும் புத்த துவாதசி ஆவணி மாதத்திலும் அனுஷ்டிக்கப்பெற வேண்டும். கந்திவிரதம் சந்திரன், தட்சனின் சாபத்தை முறியடிக்க மேற்கொண்ட விரதமாகும். சுக்கிலபட்சம் என்பது வளர்பிறை என்றும், கிருஷ்ணபட்சம் என்பது தேய்பிறை என்றும் கூறப்படும். இந்த விரதம் கார்த்திகை மாதம் சுக்கிலபட்சம் துவிதியை திதியில் ஆரம்பமாகும். கிருஷ்ண பலராமர்களை வழிபட வேண்டும். அவிஞ்ஞ விரதம் திரிபுராசுரனைக் கொல்வதற்கு முன்பு சிவபெருமா னாலும், கடல்நீரைப் பருகுவதற்கு முன்பு அகத்திய முனிவராலும் கடைப்பிடிக்கப்பட்ட விரதமாகும். பங்குனி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி அன்று கணேசனின் மந்திரங் களைச் சொல்லுதலும், அதைத் தொடர்ந்து பஞ்சமி திதியில் விநாயகனைத் தயிர், எள், பூக்கள் முதலிவற்றால் பூஜை செய்வதும் முக்கியமானதாகும். ஒருவருக்கு வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை நீக்குவதற்கு அனுஷ்டிக்கப்படும் விரதம். காமவிரதம் - தைமாதம், சுக்கிலபட்சம் பஞ்சமி திதியில் ஸ்கந்தனை நினைத்து வழிபடுவது இவ்விரதமாகும்.