பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/557

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 பதினெண் புராணங்கள் அங்கே வந்தவுடன் அவர்களுக்கு பூர்வ ஜென்மத்தின் நினைவு வந்தது. மீனாக இருந்த அரச குமாரன் திடீரென்று தரையில் விழுந்து தலையில் அடிபட்டதால் இந்த ஜென்மத்தில் தலைவலி உண்டாயிற்று என்று அறிந்து விஷ்ணுவைத் தியானித்து தீர்த்தத்தில் மூழ்கி துன்பம் நீங்கப் பெற்றான். DITHÙ{l} வராகம் பிருத்வியைப் பார்த்து யாரும் மாயை பற்றி அறிந்து கொள்ள முயலக் கூடாது. அதற்காக இந்தக் கதையைச் சொல்கிறேன் என்று ஆரம்பித்து பின்வரும் கதையைக் கூறிற்று. ஹிர்த்து வனத்தில் சோமசர்மா என்ற பிராமணன் வாழ்ந்து வந்தார். சிறந்த விஷ்ணு பக்தனான அவன் ஒருமுறை தவம் செய்கையில் விஷ்ணு எதிரே தோன்றினார். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று விஷ்ணு கேட்க மாயை பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார் சோமசர்மா. அது மனிதனுக்குத் தேவை இல்லாத ஒன்று! என்று விஷ்ணு எடுத்துச் சொல்லியும் சோமசர்மா கேட்கவில்லை. பிடிவாதமாக இருந்ததால் அவனை அழைத்துச் சென்று பக்கத்தில் உள்ள ஆற்றில் குளிக்கச் சொன்னார். உடைகள், கமண்டலம் முதலியவற்றை தரையில் வைத்துவிட்டுச் சோம சர்மா தண்ணீருக்குள் பாய்ந்தான். திடீரென்று நிஷாதர்கள் வசிக்கும் எதிர்க்கரையிலுள்ள கிராமத்தில் பெண்ணாகப் பிறந்து நிஷாதன் ஒருவனை மணந்து கொண்டு, அவனிடத்தில் இரண்டு பெண்களையும், மூன்று நெறிகளையும் பெற்றார். பல ஆண்டுகள் கழிந்தன. சோமசர்மாவுக்குத் தவம் என்பதே மறந்துவிட்டது. அந்த இடத்தில் விஷ்ணு தோன்றி அவன் யார் என்பதை நினைவூட்டியவுடன் பழைய சோமசர்மா ஆக விரும்பினான். ஆற்றின் கரையில் அப்பெண் தன் துணிகளைக்