பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்ம புராணம் 27 கிடைக்காமையால் இறந்து கிடந்த நாய் ஒன்றின் உடலைக் கொண்டு வந்தார்கள். முனிவர் அவர்களை நோக்கி, "இதன் புலாலை நன்கு கழுவி சுத்தம் செய்து தெய்வங்கட்கும், பிதுரர்கட்கும் முதலில் படையுங்கள். பிறகு இதனை நாம் உண்ணலாம்” என்று கூறினார். நாயின் புலாலைப் படைப்பது என்பது கேள்விப்படாத விஷயம். இதை அறிந்த இந்திரன் வல்லுறு வடிவம் கொண்டு வந்து நாய் உடல் இருந்த கிண்ணத்தைத் தூக்கிச் சென்று விட்டான். இதை அறிந்த விஸ்வாமித்திரர் இந்திரனை சபிக்க முற்பட்டார். முனிவர் சாபத்திற்கு அஞ்சிய இந்திரன் அந்தக் கிண்ணம் நிறைய அமிர்தத்தைக் கொண்டுவந்து, "முனிவரே! இதைச் சாப்பிடுங்கள்” என்று கூறினான். அதை மறுத்த விஸ்வா மித்திரர், "இந்திரா! உலகம் முழுதும் பட்டினியால் சாகும் பொழுது நான் மட்டும் அமிர்தத்தை உண்ண விரும்ப வில்லை. மேலும் புலால் உண்பதில் நாயின் புலால் ஆகாது என ஏன் நினைக்க வேண்டும்? உன் அமிர்தம் எனக்கு வேண்டாம். நாய் உடம்பு உள்ள கிண்ணத்தையே கொண்டு வா” என்றார். முனிவரின் முடிவை மாற்ற முடியாது என்பதை அறிந்த இந்திரன் மேகங்களை எல்லாம் ஏவி மழை பொழியும் படி செய்தான். அதன் பிறகே விஸ்வாமித்திரர் அமிர்தத்தை வாங்கி உண்டார். இது நடந்த இடம் "விஸ்வாமித்திர தீர்த்தம்” என்று அழைக்கப் பெற்றது. கெளதமி கங்கையின் சிறப்பு கங்கைக் கரையில் சுவேதா என்ற வேதியன் வாழ்ந்து வந்தான். அவன் பெரிய சிவபக்தன். அவன் காலம் முடிந்த வுடன் யமதூதர்கள் அவனைக் கொண்டு போக வந்தனர். ஆனால் அவன் ஆசிரமத்துக்குள் நுழைய முடியாதபடி சிவனுடைய படைகள் காவல் காத்து வந்தன. சென்ற தூதர்கள்