பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(13. ஸ்கந்த HUTSE) இப்புராணம் பற்றி. பதினெட்டுப் புராணங்களில் பாடல்களின் அடிப்படையில் பார்த்தால் ஸ்கந்த புராணம் மிகப் பெரியதாகும். இதில் உள்ள மொத்தப் பாடல்கள் 81,000 ஆகும். வேறு எந்தப் புராணமும் இவ்வளவு அதிகப் பாடல்களைப் பெற்றிருக்கவில்லை. இதைவிடப் பெரிய ஒன்று உண்டு என்றால் அது ஒரு லட்சம் பாடல்களைக் கொண்ட வியாச பாரதமே ஆகும். சங்கர பகவானின் மகனாகிய ஸ்கந்தனால் இப்புராணம் சொல்லப்பட்டமை யின் அவருடைய பெயரையே இப்புராணம் தாங்கி நிற்கிறது. இப்புராணம் இரண்டு வடிவுடன் உள்ளது. ஒன்று சம்ஹிதை (தொகுப்பு என்ற பெயருடன் உள்ளது. அது 1. சனத் குமார சம்ஹிதை-36,000 பாடல்கள், 2. சூத சம்ஹிதை-6000, 3. சங்கர சம்ஹிதை-30,000 பாடல்கள், 4. வைஷ்ணவ சம்ஹிதை-5,000 பாடல்கள், 5. பிரம்ம சம்ஹிதை-3000 பாடல்கள், 6. செளர சம்ஹிதை-1,000 பாடல்கள் என்ற முறையில் முதல் தொகுப்பு உள்ளது. மற்றொரு வடிவு காண்டம் எனப்படும். அவை: 1. மஹேஸ்வரி-இது கேதார காண்டம்; குமாரிகா காண்டம் அருணாசல மஹாத்மிய காண்டம் என்ற மூன்று