பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 பதினெண் புராணங்கள் பிரிவுகளைக் கொண்டது. 2. வைஷ்ணவ காண்டம்-இது பூமிவராக காண்டம் உத்கல காண்டம், பத்ரிகாசரம மஹாத்மியம், வைசாக மஹாத்மியம், யூரீ அயோத்ய மஹாத்மியம் என்ற எட்டுப் பிரிவுகளைக் கொண்டது. 3. பிரம்ம காண்டம்-இது சேது மஹாத்மியம் தர்மாரண்ய மஹாத்மியம் சாதுர்மாஸ்ய மஹாத்மியம் பிரம்மோத்ர காண்டம் ஆகிய நான்கு பிரிவுகளைக் கொண்டது. 4. காசி காண்டம்-இது பூர்வார்த்த உத்தாரார்த்த ஆகிய இரு பிரிவுகளைக் கொண்டது. 5. அவந்தி காண்டம்அவந்தி ஷேத்ரா மஹாத்மியம், ரேவாகாணம் ஆகிய இருபிரிவுகளைக் கொண்டது. 6. நாகர காண்டம்பூர்வார்த்த, உத்தரார்த்த ஆகிய இருபிரிவுகளைக் கொண்டது. 7. பிரபாச காண்டம்-துவாரகா மஹாத்மியம் என்ற பிரிவினைக் கொண்டது. இந்தப் புராணத்தில் பல்வேறு சடங்குகள் பற்றி மிக விரிவாகப் பேசப்பட்டுள்ளது. பிரசித்திபெற்ற சத்திய நாராயணன் கதை இப்புராணத்திலும் உள்ளது. மாறுபட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசும் இப்புராணம் ஒருவரால் குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றிப் பாடப் பெறவில்லை என்பதை அறிய முடியும். சடங்குகள் பற்றிப் பல்வேறு புராணங்களிலும், பிறவற்றிலும் பேசப்பட்டுள்ள வற்றை ஒரே இடத்தில் தொகுத்துக் கொடுப்பது நலம் என்று கருதிய சிலர் இதில் தம் விருப்பத்தை நிறை வேற்றிக் கொண்டனர். அறிவு ஊட்டும் பற்பல கதைகள் இப்புராணத்தில் உள்ளன. ஒருவன் தான் விரும்பிய தெய்வத்தை ஒருமுகப்பட்ட மனத்தோடு வழிபடுவானே யானால் அதற்குரிய பயனை அவன் உறுதியாகப் பெறுவான் என்ற அடிப்படை இப்புராணம் முழுவதிலும் பரவி நிற்கிறது. நைமிசாரண்ய வனத்தில் ஒரு பெரிய யாகத்தைப் பார்ப்பதற்காக முனிவர்கள் அனைவரும் கூடிஇருந்தனர்.