பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 535 சிவ புண்ணியம் சிவன் கோயிலுக்குப் போவது, கோயிலைத் துடைத்து மெழுகிச் சுத்தம் செய்வது, கோயிலுக்கு விளக்கிடுவது, தூபம், தீபம் ஏற்றுவது ஆகியவை சிவ புண்ணியங்களாகும். கோயில் கட்டுவது, நாள் ஒன்றுக்கு ஒன்று முதல் மூன்று முறை சிவன் கோயிலுக்குச் செல்வது ஆகிய செயல்களும் பெரும் புண்ணியத்தைத் தரும். நந்தியின் கதை அவந்தி நகரத்தில் நந்தி என்ற ஒரு வைசியன் வாழ்ந்து வந்தான். வாணிபம், கால்நடை வளர்ப்பு என்ற இருதுறை களிலும் செல்வம் சேகரித்துப் பெருஞ் செல்வந்தனாக வாழ்ந்து வந்தான். அவந்தியின் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய குளக்கரையில் ஒரு பெரிய சிவன் கோயில் இருந்தது. நந்தி தினந்தோறும் அக்குளத்தில் மூழ்கி, பொன்னையும், மணி யையும் சிவனுக்கு அளித்து வழிபட்டு வந்தான். நந்தி வழிபட்ட அதே லிங்கத்தை ஒரு வேடனும் வழிபட்டு வந்தான். தினந்தோறும் அவன் வழிபட வரும்போது சிவலிங்கத்தின் எதிரே இருந்த பொன், மணி, பூக்கள் ஆகியவற்றைக் காலால் எற்றிவிட்டுத் தான் கொண்டு வந்த மான்கறி, வில்வம் ஆகியவற்றைச் சிவனுக்கு அர்ப்பணித்து வழிபட்டான். தான் அளித்த பொன்னும், மணியும் சிதறிக் கிடப்பதைக் கண்ட நந்தி ஒருநாள் ஒளிந்திருந்து வேடனின் செயலைக் கண்டுவிட்டான். அவன் செயலைக் காணப் பிடிக்காத நந்தி, சிவலிங்கத்தையே பெயர்த்து தன் வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டான். அந்த லிங்கத்தை ஒரு தங்க பீடத்தில் வைத்து வழிபடலானான். மறுநாள் வேடன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காகக் கோயிலுக்கு வந்து மறைவாக நின்றிருந்தான் நந்தி. வழக்கம் போல வழிபடவந்த வேடன்