பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/568

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்கந்த புராணம் 539 தலையில் சூடிக் கொண்டார். ராகுவின் கதை மற்றப் புராணங் களில் வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது) சிவலிங்க வரலாறு சிவலிங்கத்தின் இலக்கணத்தை ஒருமுறை அகஸ்தியருக்கு நந்தி விளக்கிக் கூறினார். சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களையும் தன்னுள் பெற்று நிற்பவள் பிரகிருதி ஆவாள். யுக முடிவில் இந்த முக்குணங்களும், பிரகிருதியும் பரமாத்மாவில் சென்று லயித்து விடுகின்றன. அவ்வாறு லயித்த நிலையில் அது லிங்க வடிவாகக் காட்சி அளிக்கிறது. முக்குணங்களும் அதனுள் அடங்கி விடுதலின், லிங்கம் நிர்குணமாக விளங்குகிறது. இந்த லிங்க வடிவிலிருந்து சிவன் வெளிப்பட்டு மனைவி, பிள்ளைகள் என்பவருடன் மக்கள் ஏற்றுக் கொள்ளுகின்ற முறையில் காட்சி அளிக்கின்றார். தாரகாசுரன் கதை தாட்சாயணி தட்சனுடைய யாகத்தில், யாக குண்டத்தில் விழுந்து உயிரை விட்டாள். தாட்சாயணி இல்லாமையால் சிவன் மிகவும் மனம் மாறுபட்ட நிலையில் எதிலும் ஈடுபடாமல் தவம் செய்து கொண்டிருந்தார். சிவன் தேவர்களுக்கு உதவ மாட்டார் என்று தெரிந்தவுடன் அசுரர்கள் மிக மகிழ்ச்சி அடைந்தனர். தைத்தியர்களுள் ஒருவனாகிய நமுச்சி என்பவனின் மகன் தாரகன் பிரம்மாவைக் குறித்து கடுந்தவம் இயற்றினான். அவன் தவத்திற்கு மெச்சிய பிரம்மா என்ன வரம் வேண்டும் என்று கேட்டபொழுது, 'யாராலும் வெல்லப்படாத ஒர் ஆற்றல் வேண்டும் என்று தாரகன் கேட்டான். அத்தகைய ஒரு வரத்தைத் தர தனக்கு ஆற்றல் இல்லை என்று பிரம்மன் கூறிவிட்டு, 'அதற்குப் பதிலாக உனக்கு ஒரு நல்ல வரத்தைத்