பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/569

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 பதினெண் புராணங்கள் தருகிறேன். ஒரு குழந்தைதான் உன்னை வெல்ல முடியும்" என்றார். அதைக் கேட்ட தாரகன் பெருமகிழ்ச்சி அடைந்த வராய் இந்திரன் முதலானவருடன் போர்புரிந்து தேவர்கள் அனைவரையும் தேவலோகத்தினின்று விரட்டி விட்டான். தேவருலகில் இருந்து விரட்டப்பட்ட தேவர்கள் செய்வதறியாது திகைத்து இமவானிடம் சென்றனர். அவனிடம் நீயும், உன் மனைவியாகிய மேனையும் தவமியற்றி சிவன் மணக்கக் கூடிய ஒரு பெண்ணைப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி இமவான் தவம் செய்து பெற்ற பெண்ணே, உமா, கெளரி, பார்வதி என்ற பல பெயர்களில் அழைக்கப்படும் பெண்ணாவாள். அப்பெண் தீயில் விழுந்து இறந்த தாட்சாயணியே அன்றி வேறு யாருமல்லள். பார்வதிக்கு எட்டு வயதாகும் பொழுது, சிவன் தவம் செய்யும் இடத்தில் அவளைக் கொண்டு விட்டு சிவனுக்குப் பணிவிடை செய்யுமாறு கூறினார் இமவான். ஆனால் தவத்தில் மூழ்கிய சிவன் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் தேவர்கள் அனைவரும் கூடி மதனன் என்ற பெயருடைய காமனை அழைத்து ‘சிவன் மனத்தில் காதல் தீயை மூட்டுவாய்' என்றனர். பூக்களையே வில்லாகவும், அம்பறாத் துணியாகவும், அதிலுள்ள பாணங்களாகவும் வைத்திருந்த மதனன் சிவன் தவம் செய்யும் இடத்திற்குச் சென்று வசந்த காலத்தை உண்டாக்கி அந்த இனிமையான நேரத்தில் அம்புகளை சிவன் மீது எய்தான். தவம் கலைந்து கண்ணைத் திறந்த சிவன் எதிரே பார்வதி மலர் மாலையுடன் நின்றாள். அதைப் பற்றிக் கவலைப்படாத சிவன் அவள் பின்னே நிற்கும் மன்மதனைப் பார்த்தவுடன் கடுங்கோபம் கொண்டு தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதிலிருந்து புறப்பட்ட தீ மதனனை எரித்துச் சாம்பலாக்கி விட்டது. மிக்க