பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/573

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 பதினெண் புராணங்கள் சப்த ரிஷிகளின் மனைவிமார்கள் அனைவரும் குளிப்பதற்காக அந்தக் குளத்திற்கு வந்தனர். எல்லைமீறிய குளிரில் அவர்கள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அக்னி அங்கே கணகனவென்று எரியும் நெருப்பாக இருந்தான். ரிஷிபத்தினிகள் நெருப்பைக் கண்டதும் அதில் குளிர்காய விரும்பினர். அக்னியும் ஒரு தேவன் ஆகையால், வசிட்டன் மனைவியாகிய அருந்ததி மட்டும் அவன் பக்கத்தில் போவது தவறு என்று சொல்லி, எட்டி நின்றுவிட்டாள். ஆனால் மற்ற அறுவரும் அக்னியின் பக்கத்தில் சென்றனர். அவர்களுடைய உடம்பில் உள்ள சதை, தோல் என்பவற்றின் மூலமாக தன்னிடமிருந்த ஆற்றலை அவர்களுக்குள் செலுத்திவிட்டான். ரிஷிபத்தினிகள் வீடு திரும்பினர். நடந்ததைக் கேள்வியுற்ற அறுவரும் அவர்களை மனைவியாக ஏற்றுக் கொள்ள மறுத்து, நட்சத்திரங்களாகப் போகக்கடவீர் என்று சாபமிட்டனர். ஆனால் ரிஷிபத்தினிகள் நட்சத்திரங்களாகப் போவதற்கு முன்னர் சிவனுடைய ஆற்றலை இமயமலையின் மேல் உதறிவிட்டனர். உதறிவிடப்பட்ட இந்த ஆற்றல் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து முழுவடிவுடன் கங்கையில் மிதந்து கொண்டு வந்து கோரைகளுக்கு நடுவே தங்கியது. இந்த ஆற்றலில் இருந்து ஆறு முகங்களை உடைய குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் சில பகுதிகள் கார்த்திகைப் பெண்கள் உடம்பில் சிலகாலம் இருந்ததால், கார்க முனிவர் அக் குழந்தைக்குக் கார்த்திகேயன் என்று பெயரிட்டார். இந்தக் குழந்தை கங்கையில் மிதந்து வந்ததால் காங்கேயன் என்ற பெயர் ஏற்பட்டது. இவற்றை அல்லாமல், குகன், விசாகன், ஸ்கந்தன், குமரன், அதிபாலன் என்ற பெயர்களும் ஏற்பட்டன. காங்கேயனின் தோற்றம் குறித்த செய்தி எங்கும் பரவி பார்வதியையும் எட்டிற்று. உடனே பார்வதி குழந்தையைக் காண விரும்பினாள். நாரதரும் இவர்கள் வருகைக்கு உதவி