பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 பதினெண் புராணங்கள் கதையில் சிவனுக்கு இடமே இல்லை. ஸ்கந்தன் அக்னியின் புதல்வன் என்றும் சொல்லப்பட்டுள்ளது. தாரகன் போர் தேவர்கள் ஸ்கந்தனிடம் வந்து தங்களுக்கு உதவியாகப் போரிட்டுத் தாரகனை அழிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். போர்க்களத்தில் அசுரர்களும் தேவர்களும் நேருக்கு நேராகப் போர் புரியத் தயாராக நின்றனர். ஸ்கந்தன் ஓர் அதிசயிக்கத்தக்க விமானத்தில் ஏறி இருந்தார். இரண்டா வது வகை வரலாற்றில் இவர் மயில் மீது அமர்ந்து போருக்கு வந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, இந்திரன் ஐராவதம் மேலும், யமன், வருணன், அக்னி, குபேரன் ஆகியோர் தத்தம் வாகனங்களிலும் ஏறிவந்திருந்தனர். அவர்கள் படைகளும் அவர்களைச் சுற்றி நின்றன. எண்ணிலடங்காத படைக்கலங் களையும் அவர்கள் தாங்கி நின்றனர். எதிரணியில் தாரகனும் ஒர் அற்புதமான விமானத்தின் மேல் ஏறிவந்தான். அவனைச் சுற்றி யானை, குதிரை முதலிய நால்வகைப் படைகளும் தக்க ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக நின்றன. சண்டை தொடங்கியது. தேவர்களுக்கு உதவியாக மாந்தாதாவின் மகனாகிய முசுகுந்தனும், சிவனிடம் தோன்றிய வீரபத்திரனும் போரிட்டனர். சண்டை தொடங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் இந்தப் படைகள் தாரகனை எதிர்த்து நிற்க முடியாதென விஷ்ணு அறிந்து கொண்டார். எனவே அவர் ஸ்கந்தனிடம் வந்து, அருள் கூர்ந்து சண்டைக்குப் புறப்பட வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். ஒடிக் கொண்டிருந்த தேவர்களைப் பார்த்து தாரகன் பெரும் கூச்சலுடன், ‘வெட்கம் கெட்டவர்களே! தாரகனாகிய என்னுடன் ஒரு குழந்தையைப் போருக்கு அனுப்ப நீங்கள் எப்படித் துணிந்தீர்கள்? இந்த நிலையில் இந்திரன் வஜ்ராயுதத்தால் தாரகனை அடித்தான்.