பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/589

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 பதினெண் புராணங்கள் வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்றும் தான் கங்கைக் கரையில் அக்காரியத்தைச் செய்யாததால் தன் பிதுர்க்கள் எளிய வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும் கண்டார். உடனே தானும் மஹிசாகர சங்கமத்திற்குச் செல்லவேண்டும் என்று விரும்பி னார். ஆனால் அவர் மனைவி அதற்கு ஒத்துக் கொள்ள வில்லை. உம்முடைய பிதுர்க்களுக்கு வளமான வாழ்வு தர வேண்டும் என்றால் நீர் அங்கே போகலாம். என்னைப் பொறுத்தவரையில் இந்த வசதியான வாழ்க்கையை விட்டு விட்டுத் தெரியாத இடத்திற்கு வரத் தயாரில்லை என்று கூறிவிட்டார். தன் சீடர்களிடம் அவளை ஒப்படைத்துவிட்டு சர்மா மஹிசாகர சங்கமம் வந்து சேர்ந்தார். சில காலம் கழித்தவுடன் மனைவியைத் தனியே விட்டு வந்த துயரம் அவரை ஆட்கொண்டது. பிதுர்க்களைத் திருப்திப் படுத்த வேண்டுமானால் மஹிசாகர சங்கமத்தில் தங்க வேண்டும். மனைவியை திருப்திப்படுத்த வேண்டுமானால் கங்கைச் சங்கமத்தில் தங்க வேண்டும். எதைச் செய்வது என்று தர்மசங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டு ஓவென அழுது கொண்டிருந்த நிலையில்தான் நான் அவரைப் பார்த்தேன். நல்லவேளையாக நான் அங்கே இருந்தபொழுது சுபத்ரா வந்து சேர்ந்தாள். விபரத்தை அறிந்த அவர் அம்மாவைப் பார்த்து, நீ கவலைப்பட வேண்டாம். உம்முடைய பிதுர்க்களுக்கு நான் இங்கே தங்கி கடன்கள் செய்கிறேன். நீர் கங்கை சங்கமத்தில் தங்கி என் பிதுர்க்களுக்குக் கடன்களைச் செய்யும். ஆனால் ஒன்று, நீர் சேகரிக்கும் புண்ணியத்தில் கால்பங்கை எனக்குத் தந்துவிட வேண்டும் என்று கூறினார். இந்தத் திட்டத்தில் மன மகிழ்ச்சியோடு தன் சம்மதத்தைத் தெரிந்த அம்மா கங்கை சங்கமம் வந்து சேர்ந்தாள் என்று பிருகு முனிவர் நாரதருக்குச் சொன்னார். இதுவே மஹிசாகர சங்கமத்தின் சிறப்பாகும்.