பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 பதினெண் புராணங்கள் கேட்டான். அங்கிருந்த நாராயண முனிவர், "அக்னியே, நீ ஒன்றும் கவலைப்படத் தேவையில்லை. எந்த நேரத்தில் வதரி தீர்த்தத்தில் கால் வைத்தாயோ அப்பொழுதே உன்னுடைய பாவங்கள் அழிக்கப்பட்டு விட்டன” என்று கூறினார். எந்த இடத்தில் அக்னியின் பாவங்கள் அழிக்கப்பட்டனவோ அந்த இடமே அக்னி தீர்த்தம் என்று விளக்கப்பட்டது. அயோத்தி வைபவம் ஸ்கந்தன் ஒருமுறை அயோத்தியின் பெருமையை அகஸ்தியருக்குச் சொன்னான். அவர் சொல்லிய விபரம் வருமாறு: சரயு நதிக்கரையில் நீர் வசமாக அமைந்திருப்பது அயோத்தி மாநகரம். ராமன் ஆட்சி செய்திருந்த காலத்தில் ராமன் ஒரு கடுமையான உத்தரவைப் போட்டிருந்தார். அரண்மனையில் உள்ள ரகசிய ஆலோசனை அறையில் அவர் இருந்தால் யாரும், எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரக்கூடாது. மீறி நடப்பவர்கள் அரண்மனையை விட்டு வெளியே போக நேரிடும் என்று உத்தரவிட்டிருந்தார். ஒருமுறை தம்பி லக்ஷ்மணனைக் காவல் வைத்துவிட்டு ரகசிய ஆலோசனை மண்டபத்திற்கு ராமர் சென்றிருந்தார். காவல் காக்கும் லக்ஷ்மணன் எதிரே துர்வாசர் தோன்றி, எனக்குப் பசி அதிகமாக இருக்கிறது. உடனே ராமனைப் பார்க்க வேண்டும் என்றார். ராமன் உத்தரவை நினைத்து லட்சுமணன் தயங்கி நின்றான். துர்வாசர் கோபம் தலைக்கேற நீ இப்பொழுது ராமனைக் கூப்பிடப் போகிறாயா? அல்லது உன்னைச் சபிக்கட்டுமா என்றார். பயந்து போன லட்சுமணன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனார். உள்ளே யமனுடன் ராமன் பேசிக்கொண்டிருந்தார். லட்சுமணனைக் கண்டவுடன்,